அமெரிக்காவில் மருத்துவரின் வீட்டில் 2000க்கும் மேற்பட்ட கருக்கள் கண்டுபிடிப்பு

திங்கள், 16 செப்டம்பர் 2019 (18:20 IST)
அமெரிக்காவின் இலினோய் மாகாணத்தில் முன்னாள் கருக்கலைப்பு மருத்துவர் ஒருவரின் வீட்டில் 2000க்கும் மேற்பட்ட இறந்த கருக்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.


 
செப்டம்பர் 3ஆம் தேதி அவர் இறந்த பின்பு, மருத்துவர் அல்ரிச் க்லொஃபெர் குடும்பத்தினர் அவர் சொத்துகளைப் பிரிக்கும்போது இதை கண்டறிந்துள்ளனர்.
 
மொத்தம் 2,246 கருக்களை அந்த வீட்டில் இருந்து கண்டுபிடித்துள்ளனர்.
 
மருத்துவர் க்லொஃபெருடைய மருத்துவமனை இந்தியானா மாகாணத்தில் சௌத் பெண்ட் எனும் இடத்தில் இருந்தது. 2016ல் அதன் உரிமம் ரத்து செய்யப்பட்டது.
 
ஒரு பதிமூன்று வயது சிறுமிக்கு அதிகாரிகளிடம் கூறாமல் கருக்கலைப்பு செய்துவிட்டார் என அவர் மேல் அப்போது குற்றம் சுமத்துப்பட்டது.
 
அவர் கருக்கலைப்பு நடந்த போது அங்கு அதிகாரிகள் இருந்ததை உறுதிப்படுத்த தவறினார் என ஏபி கூறப்படுகிறது.
 
எலும்பு மற்றும் தசை நிபுணராக இருந்த அவர் தன் 43 வருடங்களில் கருகலைப்பு செய்யும்போது ஒரு நோயாளியைக்கூட இழந்ததில்லை என அவரது அறிக்கை தெரிவிக்கிறது.
 
"பெண்களே கருத்தரிக்கின்றனர். ஆண்கள் இல்லை. எனவே அவர்கள் தங்கள் வாழ்கைக்கு எது சிறந்தது என நினைக்கிறார்களோ அதை நாம் மதிக்க வேண்டும். நான் இங்கு யாரையும் அதிகாரம் செய்வதற்கு இல்லை யாரையும் மதிப்பிடுவதற்காகவும் இல்லை," என அவர் விசாரணையின்போது கூறியதாக நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கை கூறியுள்ளது.
 
இந்த கருக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டன. மேலும் இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை செய்து வருகிறது.

#BREAKING: The Will County Sheriff’s office in Illinois is conducting an investigation after finding more than 2,000 fetuses at the home of former South Bend abortion doctor Dr. Ulrich Klopfer. pic.twitter.com/ONWBfkba6n

— Max Lewis (@MaxLewisTV) September 14, 2019

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்