விமானத் தேடல்: மேலும் சில பொருட்கள் சீன விமானத்தின் பார்வையில்

சனி, 29 மார்ச் 2014 (18:07 IST)

காணாமல்போன மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் புதிதாக தேடப்பட்டு வருகின்ற கடல் பகுதியில் பணிகள் விறுவிறுப்படைந்துவருகின்ற ஒரு சூழலில், சீன விமானம் ஒன்று மேலதிகமான பொருட்கள் கடலில் மிதப்பதை கண்டுள்ளது.


 




இந்தியப் பெருங்கடல் பகுதியில்வெள்ளிக்கிழமையன்று ஆஸ்திரேலிய அதிகாரிகளால் அடையாளம் காட்டப்பட்டப்பட்ட ஒரு இடத்தில், விமானங்களில் இருந்து பார்த்தபோது தெரிந்த குப்பைகளை, தேடியெடுக்க இரண்டு சீனக் கப்பல்கள் முயன்றுவருகின்றன.

மலேசிய போக்குவரத்து விமானம் ஒன்றும் இந்த பணியில் சேர்ந்துகொண்டுள்ள நிலையில், இப்பகுதியில் தேடுதல் பணியாற்றிவரும் விமானங்காளின் மொத்த எண்ணிக்கை எட்டாகியுள்ளது.

ஆனால் மழையின் காரணமாக வெளிச்சத்தின் அளவு குறைந்து தேடுதல் பணி சனிக்கிழமை பின்னேரத்தில் பாதிக்கப்படலாம் என வானியல் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

MH370 விமானம் சுமார் 240 பேரோடு மூன்று வாரங்களுக்கு முன் காணாமல்போயிருந்தது.

வெப்துனியாவைப் படிக்கவும்