குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 (மீனம்)

செவ்வாய், 25 செப்டம்பர் 2018 (15:02 IST)
மீனம்:  (பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி). கிரகநிலை: 04-10-2018 அன்று இரவு 10.05 மணிக்கு குரு பகவான் உங்களின் அஷ்டம ஸ்தானத்திலிருந்து பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

 
பாக்கிய ஸ்தானத்தில் இருந்து ஐந்தாம் பார்வையாக உங்களின் ராசியையும், ஏழாம் பார்வையாக தைரிய வீரிய ஸ்தானத்தையும், ஒன்பதாம் பார்வையாக பஞ்சம ஸ்தானத்தையும் பார்க்கிறார். 
 
பலன்: எதிலும் சாதிக்கும் திறமையும், சிறந்த நிர்வாகத் திறனும் உடைய மீன ராசி அன்பர்களே! இந்த குரு பெயர்ச்சியால் நல்ல சுமூகமான வாழ்க்கையை  வாழப் போகிறீர்கள். சுபச் செய்திகளும் வரலாம். உண்மையான உறவுகளுக்கு மதிப்பு கொடுத்து அவர்களை உங்கள் அருகில் வைத்துக் கொள்வீர்கள்.
 
குடும்பத்தில் சுமூகமான உறவு இருக்கும். இதனால் உங்களுக்குள் ஒரு தன்னம்பிக்கை பிறக்கும். இவை அனைத்தையும் நல்ல முறையில் பயன்படுத்துவது மிக  முக்கியமானதாகும். தொழில் செய்வபரகளுக்கு சில சவாலான சூழ்நிலைகள் அமையும். ஆனாலும் குருபகவானின் துணையால் அதை சமாளித்து வெற்றி  பெறுவீர்கள். இதனால் உங்கள் புகழ் மட்டுமின்றி தொழிலும் லாபத்தை நோக்கி உயரும்.
 
உத்யோகஸ்தர்களுக்கு வழக்குகள் உங்களுக்கு சாதகமாக அமையும். வர வேண்டிய பணம் வந்து சேரும். வேலையை இடையில் நின்றவர்கள் மீண்டும்  தொடருவார்கள். பெண்களில் திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நடக்கும். பயணத்தின் போது கவனமாக இருப்பது அவசியம். சோம்பல் நீங்கும்.  பிள்ளைகளுக்கு தேவையானதை வாங்கிக்கொடுத்து மகிழ்வீர்கள்.
 
மாணவர்கள் வெளியூர் சென்று சில சான்றிதழ் படிப்புகளை படிப்பீர்கள். இது உங்களின் எதிர்கால வேலைக்கு உதவிகரமாக இருக்கும். அரசியல்துறையினர் வார்த்தைகளை சரியான முறையில் பிரயோகப்படுத்துவது அவசியம். தேவையில்லாமல் பேசுவதைத் தவிர்த்தாலே சில பிரச்சனைகளில் இருந்து தப்பிக்கலாம். கலைத்துறையினருக்கு உங்களின் வாழ்க்கையில் முக்கியமான காலகட்டமாக இது இருக்கும். பிரபலங்களுடன் இணைந்து வேலை செய்யும் வாய்ப்பு  கிடைக்கும்.
 
பூரட்டாதி 4ம் பாதம்: இந்த குரு பெயர்ச்சியில் அலுவலக விசயத்தில் கவனம் தேவை. உடல் நலத்தில் அக்கறை செலுத்த வேண்டியது அவசியம். பணம் சார்ந்த  விஷயங்களில் கவனம் தேவை. கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியாமல் போகலாம். 
 
உத்திரட்டாதி: இந்த குரு பெயர்ச்சியில் சிறு தொழில், வாணிபம் செய்பவர்கள் நல்ல லாபத்தை எதிர்பார்க்கலாம். முடிவுகள் எடுக்கும் போது பெரியோர் அறிவுரை  கேட்டு நடப்பது அவசியமாகிறது. எதிர்பார்த்த இடத்தில் இருந்து பணம் வரலாம். 
 
ரேவதி: இந்த குரு பெயர்ச்சியில் குடும்பத்திற்குத் தேவையான பொருள் ஒன்றை வாங்குவீர்கள். தாயாரின் உடல் நலம் பாதிக்கப்படக்கூடும். ஓய்வு பெற்ற  ஊழியர்களுக்கு நிலுவைப் பணம் வரவேணிடி இருந்தால் இப்போது கைக்கு வரும். 
 
பரிகாரம்: பழைய கோவில்களுக்கு தீபமேற்றுவதற்கு எண்ணெய் வாங்கிக் கொடுங்கள்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்