மே மாத ராசிபலன்கள், செய்ய வேண்டிய பரிகாரங்கள்! – மகரம்!

Prasanth Karthick

வியாழன், 1 மே 2025 (06:26 IST)
மே மாதாந்த ராசிபலன் மற்றும் செய்ய வேண்டிய பரிகாரங்கள் 12 ராசிகளுக்கும்..!

கிரகநிலை:
தன வாக்கு குடும்ப  ஸ்தானத்தில்  சனி, ராஹு - தைரிய வீரிய  ஸ்தானத்தில்  சுக்ரன்   - சுக ஸ்தானத்தில்  சூர்யன், புதன் -  பஞசம  ஸ்தானத்தில்  குரு, சந்திரன் - களத்திர  ஸ்தானத்தில்  செவ்வாய் -  அஷ்டம  ஸ்தானத்தில்  கேது என வலம் வருகிறார்கள்

கிரகமாற்றம்:
11-05-2025 அன்று குரு பகவான்  பஞ்சம  ஸ்தானத்தில் இருந்து ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
14-05-2025 அன்று சூரிய பகவான் சுக ஸ்தானத்தில்  இருந்து பஞசம  ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
16-05-2025 அன்று புதன் பகவான் சுக ஸ்தானத்தில்  இருந்து பஞசம  ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
31-05-2025 அன்று சுக்ர பகவான் தைரிய வீரிய  ஸ்தானத்தில்  இருந்து சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:
வெட்டு ஒன்று துண்டு இரண்டு என வாழ்க்கையில் நேர்கோட்டில் பயணிக்கும் மகர ராசி அன்பர்களே நீங்கள் தனித்தன்மை கொண்டவர்கள்.

இந்த மாதம் ராசிநாதன் சனி பலமாக இருக்கிறார். பலவகையிலும் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். நீண்ட நாட்களாக இருந்து வந்த வேதனையும் சோதனையும் மாறும். உடல் ஆரோக்கியம் வலுப்பெறும். வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை.  அரசாங்க காரியங்களில் இருந்த தடை நீங்கும். புத்தி சாதூரியம் அதிகரிக்கும்.

தொழில் வியாபாரத்தில் உயர்வுகள் உண்டாகும். பணியாளர்கள் மூலம் காரிய அனுகூலம் ஏற்படும். அனுபவப் பூர்வமான அறிவு கைகொடுக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எளிதாக பணிகளை செய்து முடிப்பார்கள். செயல்திறன் அதிகரிக்கும். உங்களுக்கான வேலைகளை சரியான நேரத்தில் செய்து முடித்து பாராடுகள் பெறுவீர்கள்.

குடும்பத்தில் இருப்பவர்கள் ஏதாவது குறை சொல்லியபடி இருப்பார்கள். வீட்டிற்கு தேவையான பொருட்கள் சேரும்.  கணவன், மனைவி ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு செயல்படுவது  நன்மையை தரும்.  பிள்ளைகள் எதிர்காலம் குறித்து தேவையான பணிகளை கவனிப்பீர்கள்.

பெண்களுக்கு புத்திசாதூரியம் அதிக ரிக்கும். பயணங்களின் போது கவனம் தேவை. வேலைக்கு செல்லும் பெண்கள் தங்கள் பொருட்களை பத்திரமாக வைத்திருப்பது நல்லது.

கலைத்துறையினருக்கு திடீர் கோபங்கள் உண்டாகலாம். நிதானமாக இருப்பது நல்லது. புத்திசாதுரியத்தால் எதையும் சமாளிப்பீர்கள். எந்த ஒரு விஷயத்தையும் தள்ளிப் போடாமல் உடனே முடிவு காண்பது நல்லது. தெளிவான  சிந்தனை தோன்றும். எந்த காரியத்தையும் செய்யும் முன் ஆலோசனை செய்து அதில் ஈடுபட்டு வெற்றி  காண்பீர்கள்.

அரசியல் துறையினருக்கு சாமர்த்தியமான உங்களது செயல் கண்டு மற்றவர்கள் ஆச்சரியப்படுவார்கள். முக்கிய நபர்கள், அந்தஸ்தில் உயர்ந்தவர்கள் நட்பு கிடைக்கும். அதனால் கவுரவம் அதிகரிக்கும். புதிய தொடர்புகள் மகிழ்ச்சி தரும். புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். அதனால் நன்மை உண்டாகும்.

மாணவர்களுக்கு கல்வியில் இருந்த தடைகள்  நீங்கும். திறமை வெளிப்படும். ஆசிரியர்களுடன் நல்ல உறவு ஏற்படும். பெற்றோர் ஆதரவாக இருப்பார்கள்.

உத்திராடம் 2, 3, 4 பாதம்:
உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். நிலுவையில் உள்ள தொகை வந்து சேரும். சிலருக்கு வேலை மாற்றம் உண்டாகும். கணவன், மனைவி உறவு மகிழ்ச்சிகரமாக இருக்கும். குடும்பத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். தெய்வ நம்பிக்கை கூடும்.

திருவோணம்
உறவினர்கள், நண்பர் கள் மூலம் உதவிகள் கிடைக்கும். பிள்ளைகளின் நலனில் அக்கறை காட்டுவீர்கள். பெண்கள் திறமையாக சமாளித்து எந்த பிரச்சனையிலும் சாதகமான முடிவை பெறுவீர்கள். இழுபறியாக இருந்த காரியங்களில் எதிர்பாராத திருப்பம் ஏற்படும். மாணவர்களுக்கு தேர்வுகள் பற்றிய பயம் நீங்கும். கல்வியில் முன்னேற்றம்  காணப்படும்.

அவிட்டம் 1,2 பாதம்
இன்று  எல்லா காரியங்களிலும் நன்மை உண்டாகும் செய் தொழில் சிறக்கும்.  நண்பர்கள் மூலம் தக்க தருணத்தில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வெளியூர் பயணங் களால் வீண் அலைச்சலும் செலவும் ஏற்படலாம். செய் தொழிலில் மன நிம்மதியும் அதிக நன்மையும் உண்டாகும்.

பரிகாரம்: சனிக்கிழமை தோறும் அருகிலிருக்கும் பெருமாள் ஆலயத்திற்கு சென்று வாருங்கள். நீராஞ்சன தேங்காய் தீபம் ஏற்றவும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: வளர்பிறை: ஞாயிறு, செவ்வாய், வியாழன்; தேய்பிறை: செவ்வாய், வியாழன், வெள்ளி;
சந்திராஷ்டம தினங்கள்: 6, 7
அதிர்ஷ்ட தினங்கள்:  1, 27, 28

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்