மார்ச் 2020 மாத ஜோதிடப் பலன்கள்: மகரம்

ஞாயிறு, 1 மார்ச் 2020 (15:02 IST)
மகரம் (உத்திராடம் 2, 3, 4 பாதம், திருவோணம், அவிட்டம் 1,2 பாதம்)


கிரகநிலை:
ராசியில்  புதன் (வ)  - தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தில்  சூர்யன் -  தைரிய ஸ்தானத்தில்  சுக்ரன் -  சுக  ஸ்தானத்தில் சந்திரன் -  ரண, ருண  ஸ்தானத்தில்  ராஹூ -   அயன, சயன,  போக ஸ்தானத்தில் செவ்வாய்,  குரு,  சனி , கேது  என கிரகங்கள் வலம் வருகின்றன.

கிரகமாற்றம்:
01-03-2020 அன்று பகல் 2.29 மணிக்கு சுக்கிர பகவான் சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
11-03-2020 அன்று மாலை 3.35 மணிக்கு புதன் பகவான் தன ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
12-03-2020 அன்று பகல் 11.44 மணிக்கு சூர்ய பகவான் தைரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
23-03-2020 அன்று மாலை 6.59 மணிக்கு செவ்வாய் பகவான் ராசிக்கு மாறுகிறார்.
28-03-2020 அன்று காலை 4.20 மணிக்கு  குரு பகவான் ராசிக்கு மாறுகிறார்.
28-03-2020 அன்று மாலை 3.26 மணிக்கு சனி பகவான் ராசிக்கு மாறுகிறார்.
29-03-2020 அன்று காலை 6.16 மணிக்கு சுக்கிர பகவான் பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:
உச்சி மீது வான் இடிந்து வீழுகின்ற போதிலும் அச்சமில்லை அச்சமில்லை என்று சொல்லக் கூடிய எதிலும் பின்வாங்காத அஞ்சா நெஞ்சம் உடைய மகர ராசியினரே இந்த மாதம் வீண் செலவு ஏற்படும். காரியங்களில் தாமதம் உண்டாகும். உடற்சோர்வு மன சோர்வு வரலாம். மிகவும் வேண்டியவரை பிரிய நேரிடும். கண்மூடித்தனமாக எதையும் செய்யாமல் யோசித்து செய்வது நல்லது. தாய், தந்தையின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. இருக்கும் இடத்தை விட்டு வெளியேற வேண்டி இருக்கும்.

தொழில் வியாபாரம் தொடர்பான அலைச்சல் அதிகரிக்கும். எதிர்பார்த்த லாபம் தாமதப்படும். புதிய ஆர்டர்கள் கிடைப்பதில் தடைகள் உண்டாகலாம்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை பளு அதிகரிக்கும். குடும்பத்தில் நிம்மதி குறையும்படியான ஏதாவது சம்பவங்கள் நடக்கலாம். கணவன், மனைவிக்கிடையே மன வருத்தம் ஏற்படலாம். பிள்ளைகள் நலனில் அக்கறை தேவை. நண்பர்கள் உறவினர்களிடம் கவனமாக பேசி பழகுவது நல்லது.

கலைத்துறையினருக்கு சோதனைகள் மிகுந்த காலமாக இருக்கும். வாய்ப்புகள் இருந்தாலும் உடல்நலம் ஒத்துழைக்காமல் போகலாம். சிறு பிரச்சனையாக இருந்தாலும் கவனமுடன் இருப்பது நல்லது.

அரசியல்வாதிகளுக்கு முன்னேற்றத்தில் தடைகள் இருக்கும். பொறுமையாக கையாள்வதன் மூலம் பெரிய பிரச்சனைகளைத் தவிர்க்கலாம். மிகவும் பொறுமையாக செயல்பட வேண்டிய காலகட்டமிது.

பெண்களுக்கு எந்த ஒரு காரியத்தையும் செய்யும் முன் தீர ஆலோசனை செய்வது நல்லது. எதிலும் கவனம் தேவை.

மாணவர்களுக்கு  கல்வியில் முன்னேற்றமடைய கடின உழைப்பு தேவை. எல்லோரிடமும் அனுசரித்து செல்வது நல்லது.

உத்திராடம் 2, 3, 4 பாதம்:
வெளிநாடுக்கு ஏற்றுமதி செய்வோருக்கு புதிய ஆர்டர்கள் வந்து சேரும். புதிய இட ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். தொழிற்சாலைகள் வைத்திருப்போருக்கு நல்ல லாபம் கிடைக்கும். பொதுவான விஷயங்களில் தலையிடுவோருக்கு உங்கள் கருத்துக்களை மற்றவர்கள் ஆமோதிப்பார்கள். வியாபார போட்டிகள் சாதகமான முடிவினைத் தேடித் தரும். கவலை வேண்டாம்.

திருவோணம்:
உங்களின் புத்திசாதூரியம் வெளிப்படும். கல்வியில் இருந்த  தொய்வு நீங்கும். குடும்பத்தில் உள்ள பிரச்சனைகள் தீர்வதற்கு கவனம் செலுத்துவீர்கள். அடுத்தவர்களால் ஏற்படும் கெடுதல்கள் நீங்கும். மனதில் அமைதி பிறக்கும். உங்களது பணிகளை அடுத்தவரிடம் ஒப்படைக்காமல் நேரிடையாக செய்யுங்கள்.

அவிட்டம் 1,2 பாதம்:
எல்லா வகையிலும் நன்மை உண்டாகும். தனலாபம் உண்டாகும். அடுத்தவர்களுக்கு உதவி செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். நோய் நீங்கி உடல் ஆரோக்கியம் உண்டாகும். எதிர்பாலினத்தாரால் செலவு  ஏற்படும். கோபத்தால் சில்லறை சண்டைகள் ஏற்படலாம். பணவரத்து கூடும். காரிய அனுகூலம் உண்டாகும்.

பரிகாரம்: சனிக்கிழமையில் சனி பகவானை வணங்கி காகத்திற்கு எள் சாதம் வைத்து வர உடல் ஆரோக்கியமடையும். வீண் அலைச்சல் குறையும். கடினமான பணிகள் எளிதாக முடியும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: வெள்ளி, சனி
சந்திராஷ்டம தினங்கள்: 8, 9, 10
அதிர்ஷ்ட தினங்கள்: 2, 3, 29, 30

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்