சிம்மம் - வைகாசி மாதப் பலன்கள்

புதன், 15 மே 2019 (16:27 IST)
(மகம், பூரம்,  உத்திரம் 1ம் பாதம்) - கொண்ட கொள்கையில் உறுதியாக இருக்கும் சிம்ம ராசியினரே இந்த மாதம் செலவு அதிகரிக்கும். பயணங்கள் மூலம் வீண் அலைச்சலும், காரிய தாமதமும் உண்டாகும். நன்மை ஏற்படும். புதிய நட்புகள் கிடைக்கும். எடுத்த காரியங்கள் கை  கூடும். அடுத்தவர் செயல்களுக்கு பொறுப்பேற்காமல் தவிர்ப்பது நல்லது. பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.
குடும்பத்தில் இருப்பவர்களின் செய்கையால் மன உளைச்சல் ஏற்படலாம். கணவன், மனைவிக்கிடையே வாக்கு வாதங்கள் உண்டாகாமல் தவிர்ப்பது நன்மை தரும். பிள்ளைகளுடன் சகஜமாக பேசி வருவது நல்லது. அவர்கள் நலனில் அக்கறை காட்டுவீர்கள்.
 
தொழில் வியாபாரம் சுமாராக நடக்கும். கடன் பிரச்சனைகள் கட்டுக்குள் இருக்கும். எதிர்பார்த்த லாபம் கிடைத்தாலும் செலவும் உண்டாகும்.
 
உத்தியோகத்தில் இருப்பவர்கள் அதிகம் உழைக்க வேண்டி இருக்கும். கலைத்துறையினருக்கு எதிர்பாலினத்தவரிடம் பழகும்போது கவனம்  தேவை. நண்பர்கள் மூலம் வீண் அலைச்சல் குறையும்.  நேரம்  தவறி உணவு  உண்ண வேண்டி இருக்கும்.
 
அரசியல்துறையினருக்கு நினைக்கும் காரியங்கள் தள்ளிபோகலாம். வீண் அலைச்சல் வேலைப்பளு இருக்கும். மேலிடத்திடம் நெருக்கம்  அதிகரிக்கும். மனம் மகிழும் காரியங்கள் நடக்கும்.
 
பெண்களுக்கு வீண் அலைச்சலும் காரிய தாமதமும் ஏற்படலாம். மற்றவர்களுக்காக பொறுப்புக்களை ஏற்பதை தவிர்ப்பது நல்லது.  மாணவர்களுக்கு கல்வியில் எதிர்பார்த்த முன்னேற்றம் காணப்படும். எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.
 
மகம்: இந்த மாதம் சக ஊழியர்களிடம் சகஜமாக பேசி பழகுவது நல்லது. பணவரத்து அதிகமாகும். எதிர்ப்புகள்  நீங்கி எதிலும் உற்சாகம்  உண்டாகும். மனமகிழ்ச்சிக்காக பணம் செலவு செய்ய தயங்க மாட்டீர்கள். நண்பர்கள் சேர்க்கையும் அவர்களால் உதவியும் கிடைக்கும்.
 
பூரம்: இந்த மாதம் தொழில் வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்க பெறுவீர்கள். வியாபாரம் தொடர்பான வெளியூர் பயணங்கள் சாதகமான  பலன்தரும். உத்தியோகத்தில்  இருப்பவர்களுக்கு வேண்டிய உதவிகள் மேல் அதிகாரிகள் மூலம் கிடைக்கும். பொறுப்புகள் கூடும். சிலருக்கு  எதிர் பார்த்த பதவி உயர்வும் கிடைக்கக்கூடும்.
 
உத்திரம் 1ம் பாதம்: இந்த மாதம் குடும்பத்தில் வாழ்க்கை துணை மூலம் மகிழ்ச்சி உண்டாகும். உஷ்ண சம்பந்தமான நோய்வரக்கூடும்.  எச்சரிக்கையாக இருப்பதன் மூலம் அதை தடுக்கலாம். பிள்ளைகள் மனம் மகிழும்படி நடந்து கொள்வார்கள். வீண் விவகாரங்களில்  தலையிடுவதை தவிர்ப்பது நல்லது.
 
சந்திராஷ்டம தினங்கள்: மே: 29, 30
அதிர்ஷ்ட தினங்கள்: மே: 21, 22, 23
பரிகாரம்: பிரதோஷ காலத்தில் நந்தீஸ்வரரையும், சிவபெருமானையும் வணங்க எல்லா நன்மைகளும் உண்டாகும். எதிர்பார்த்த காரியங்கள்  திருப்திகரமாக நடக்கும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்