ஜூன் 2022 மாத ஜோதிடப் பலன்கள்: மேஷம்

செவ்வாய், 31 மே 2022 (16:12 IST)
மேஷம் (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்)

 
கிரகநிலை:
ராசியில் புத, ராஹூ, சுக்ரன்  - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சூர்யன் - தைரிய வீரிய ஸ்தானத்தில் சந்திரன் - களத்திர ஸ்தானத்தில் கேது - தொழில் ஸ்தானத்தில் சனி(வ) - அயன சயன போக ஸ்தானத்தில் செவ்வாய், குரு என கிரகநிலை உள்ளது.
 
கிரகமாற்றங்கள்:
06-06-2022 அன்று பகல் 01:59 மணிக்கு புதன் பகவான் ராசியில் இருந்து தன வாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
18-06-2022 அன்று மாலை 05:55 மணிக்கு சுக்ர பகவான் ராசியில் இருந்து தன வாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
25-06-2022 அன்று இரவு 12:24 மணிக்கு புதன் பகவான் தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் இருந்து தைரிய வீரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
27-06-2022 அன்று விடியற்காலை 05:32 மணிக்கு செவ்வாய் பகவான் அயன சயன் போக ஸ்தானத்தில் இருந்து ராசிக்கு மாறுகிறார்.
 
பலன்:
எடுத்துக் கொண்ட காரியத்தில் தைரியமும் தன்னம்பிக்கையும் ஆர்வமுடன் லட்சிய நோக்குடன் தக்க விதத்தில் செயலாற்றி சாதனை புரியும் மேஷ ராசி அன்பர்களே நீங்கள் எடுத்த வேலைகளை சரியான நேரத்தில் முடிக்கும் வல்லவர்.
 
இந்த மாதம் சமூகத்தில் உயர்ந்தவர்கள் மத்தியில் புதியதொரு மரியாதையும் வரவேற்பும் உங்களுக்கு கிடைக்கப்பெறும. தாயின் உடல்நலத்தில் சிறு சிறு தொந்தரவுகள் உண்டாகி நல்ல பராமரிப்பின் காரணமாய் உடல் நலம் பெறும். கணவன் மனைவி குடும்ப ஒற்றுமையில் சீரான நிலையே காணப்படும். ஆயுள் அபிவிருத்தி பெறுவதற்கான வகையில் உங்கள் நற்செயல்கள் இருக்கும். தந்தை வழி உறவினர்கள் உங்கள் முன்னேற்றத்தை கண்டு தங்களுக்கு தேவையான உதவிகளை உங்களிடம் கேட்டு பெற வருவார்கள். 
 
உத்தியோகஸ்தர்கள் அரசு தனியார் துறைகளில் உள்ளவர்களுக்கும் புதிய வாய்ப்புகள் உருவாகும். உங்களுக்கு தேவையான பொருளாதாரம் நிறைந்த வகையில் கிடைக்கும். 
 
தொழிலதிபர்கள் புதிய சந்தை வசதிகளையும் அதிக பொருளாதார வரவுகளையும் பெறுவார்கள். தொழில் மேன்மைக்காக நிறுவன இட விஸ்தரிப்பு, புதிய கிளை துவக்கம் போன்ற நற்பலன்களைப் பெறுவார்கள். 
 
பெண்கள் கைதொழில் ஒன்றை கற்றுக்கொண்டு பணியில் ஈடுபட்டுள்ள பெண்கள் தொழில் மேன்மை பெறுவார்கள். அதிக வேலை வாய்ப்புகளை பெற்று நிறைவான பொருளாதாரம் பெறுவார்கள். திருமண வாய்ப்புகளுக்காக காத்திருக்கும் பெண்களுக்கு சரியான வரன் அமையும். 
 
கலைத்துறையினர் சினிமா நாடகம் சின்னத்திரை ஆடல் பாடல் போன்றவற்றில் ஈடுபாடு உள்ளவர்கள் தங்கள் தொழிலில் மிகுந்த அக்கறையுடன் செயல்பட்டு நிறைவான பொருளாதாரமும் அதிகமான புகழும் பெறுவார்கள்.
 
அரசியல்துறையினர் உங்களின் நற்செயல்களின் வெளிப்பாடுகளால் உயர்வைப்பெற்று புகழ் பெறுவீர்கள். அரசியலுடன் இணைந்த வகையில் தங்களது தொழில் வாய்ப்பை பயன்படுத்துபவர்கள் அரசு சார்ந்த அதிகாரிகளிடம் தகுந்த அனுசரணையுடன் நடந்து ஏற்றம் பெறுவீர்கள்.  
 
மாணவர்கள், தங்களது படிப்பினால் உயர்ந்த மார்க் பெற்று தகுதியான பணிகளைச் செய்யும் சிறந்த வாய்ப்புகளை பெறுவார்கள். தேவையான பொருளாதார வசதிகள் தன்னிறைவாய் கிடைக்கும். 
 
அஸ்வினி:
இந்த மாதம் குடும்பத்தில் அமைதி எற்படும். உங்களது வார்த்தைகளுக்கு மதிப்பு கூடும். குடும்பத்திற்கு தேவையான பொருட்கள் வாங்குவீர்கள். பிள்ளைகளிடம் அன்பு அதிகரிக்கும். அவர்களது நலனில் அக்கறை காட்டுவீர்கள்.
 
பரணி:
இந்த மாதம் தொழில் வியாபாரம் தொடர்பாக இழுபறியாக இருந்த சில பிரச்சனைகள் நல்ல முடிவுக்கு வரும். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். ஏற்கனவே வியாபாரம் தொடர்பாக செய்து பாதியில் நின்ற பணிகளை மீண்டும் செய்து முடிப்பீர்கள். உத்யோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். பணவரத்து திருப்தியாக இருக்கும். புதிய பொறுப்புகள் ஏற்படலாம்.
 
கார்த்திகை:
இந்த மாதம் பேச்சினால் ஏற்பட்ட மனஸ்தாபங்கள் நீங்கி பிரிந்தவர்கள் மீண்டும் நட்பு பாராட்டுவார்கள். பணவரத்து அதிகரிக்கும். மனதில் புதுதெம்பும் உற்சாகமும் தோன்றும். எதிர்பாரத உதவியால் நன்மை ஏற்படும்.
 
பரிகாரம்: முடிந்த வரை செவ்வாய்கிழமை தோறும் அருகிலிருக்கும் முருகன் கோவிலுக்குச் சென்று வலம் வரவும். 
அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், செவ்வாய், வியாழன்
சந்திராஷ்டம தினங்கள்: ஜூன் 13, 14
அதிர்ஷ்ட தினங்கள்: ஜூன் 6, 7

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்