மார்கழி மாத ராசி பலன்கள் 2022 – ரிஷபம்

வெள்ளி, 16 டிசம்பர் 2022 (07:31 IST)
ரிஷபம் (கார்த்திகை 2, 3, 4 பாதங்கள் ரோகிணி, மிருக சிரீஷம் 1, 2, பாதங்கள்)


கிரகநிலை:
ராசியில் செவ்வாய் (வ)  - சுக ஸ்தானத்தில் சந்திரன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் கேது  - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் சூர்யன், புதன், சுக்கிரன்  - பாக்கிய ஸ்தானத்தில் சனி - லாப ஸ்தானத்தில் குரு - விரைய ஸ்தானத்தில் ராகு என கிரகநிலை இருக்கிறது.

கிரகமாற்றங்கள்:
30-12-2022 அன்று சுக்ர பகவான் அஷ்டம ஸ்தானத்தில் இருந்து களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:
சமயத்திற்கு தகுந்தார்போல் கருத்துக்களை மாற்றிக்கொள்ளும் ரிஷபராசியினரே இந்த மாதம் துன்பம் வருவது போல் இருக்குமே தவிர, ஆனால் வராது.  மனதில் ஏதேனும் கவலை, பயம் அவ்வப்போது ஏற்படும். உங்களது பேச்சே உங்களுக்கு எதிர்ப்பை உண்டாக்கலாம். யோசித்து பேசுவது நல்லது. ஆன்மீக எண்ணம் அதிகரிக்கும்.

தொழில் வியாபாரம் மூலம் வர வேண்டிய லாபம் தாமதப்படும். எதிர்பார்த்த நிதியுதவி ஓரளவு கிடைக்கும். ஆர்டர்க ளுக்காக இருந்த அலைச்சல் குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு விருப்பம் இல்லாத மாற்றம் வரலாம்.

குடும்பத்தில் வீண் வாக்குவாதங்கள் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே  நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. பிள்ளைகள்  உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உறவினர்கள், நண்பர் களிடம் கவனமாக பழகுவது நல்லது.

பெண்களுக்கு:  எந்த ஒரு காரியத்தையும் செய்து முடிக்கும் வரை அந்த காரியம் முடியுமோ, முடியாதோ என்ற மனக் கவலை இருக்கும். வீண் அலைச்சல் குறையும்.   

கலைத்துறையினருக்கு எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. கஷ்டம் தீரும். பேச்சின் இனிமையால் காரியம் கைகூடும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது.

அரசியல் துறையினருக்கு நிதானமாக பேசுவது நன்மை தரும். பணவரத்து திருப்தி தரும்.  எதிர்பார்த்த தகவல்கள் வரும்.  மகிழ்ச்சி உண்டாகும்.  வாழ்க்கையில் நல்ல திருப்பம் ஏற்படும். பயணங்கள் மூலம் லாபம் கிடைக்கும். மனதில் மகிழ்ச்சி ஏற்படும்படியான காரியங்கள் நடக்கும்.

மாணவர்களுக்கு:  கல்வியில் வெற்றி பெறுவது பற்றிய மனக்கவலை இருக்கும். சகமாணவர்களுடன் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது.

கார்த்திகை 2, 3, 4 பாதம்:
இந்த மாதம் உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். நிலுவையில் உள்ள பணம் வந்து சேரும். நிர்வாக திறமை வெளிப்படும். மேலிடத்தில் உங்களுக்கான அங்கீகாரம் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். தேவையான நிதியுதவி கிடைக்கும். சிக்கலான பிரச்சனைகளையும் எளிதாக தீர்ப்பீர்கள்.  ஆன்மீக பணிகளில் நாட்டம் செல்லும். உங்களது பொருட்களை கவனமாக பாதுகாத்துக் கொள்வது நல்லது.

ரோகிணி:
இந்த மாதம் வீட்டில் திருமணம் போன்ற  சுபகாரியங்கள் நடக்கும். கணவன், மனைவிக்கிடையே இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். பிள்ளைகள் மூலம் பெருமை கிடைக்கும். உறவினர்கள் மூலம் உங்களின் செயல்பாடுகளுக்கு ஆதரவு அதிகரிக்கும். தொழில், வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் கூடுதலாக பணியாற்ற வேண்டும். ஆர்டர்கள் கிடைக்க அலைய வேண்டி இருக்கும். பணவரத்து இருந்தாலும் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.

மிருக சிரீஷம் 1, 2, பாதம்:
இந்த மாதம் மனோதைரியம் கூடும். சாமர்த்தியமான பேச்சால் எடுத்த காரியம் வெற்றிபெறும். நன்மை தீமை பற்றி கவலைப்படாமல் தங்களுக்கு கொடுக்கப்பட்ட பணியை திறம்பட செய்வீர்கள். போட்டிகள் மறையும். ஒப்பந்தங்கள் தொடர்பான காரியங்கள் சாதகமாக பலன் தரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கவனமாக செயல்படுவது நல்லது. புதிய பதவிகள் தொடர்பான விஷயங்கள் தாமதப்பட்டாலும் பொறுப்புகள் அதிகரிக்கும்.

பரிகாரம்:  பவுர்ணமியில் பூஜை செய்து அம்மனை வணங்க மனக்கவலை நீங்கும். காரிய வெற்றி உண்டாகும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், வியாழன், வெள்ளி;
சந்திராஷ்டம தினங்கள்: டிச 23, 24
அதிர்ஷ்ட தினங்கள்: டிச 17, 18; ஜன 13, 14

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்