டிசம்பர் 2021 மாத ஜோதிடப் பலன்கள்: கடகம்

வெள்ளி, 3 டிசம்பர் 2021 (09:30 IST)
கடகம் (புனர் பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்)

 
கிரகநிலை:
சுக ஸ்தானத்தில் சந்திரன், செவ்வாய் - பஞ்சம ஸ்தானத்தில் சூர்யன், புதன், செவ்வாய் - ரண ருண ரோக ஸ்தானத்தில் சுக்ரன் - களத்திர ஸ்தானத்தில் சனி - அஷ்டம ஸ்தானத்தில் குரு - லாப ஸ்தானத்தில் ராஹூ என கிரகநிலை உள்ளது.
 
கிரகமாற்றங்கள்:
04-12-2021 அன்று புதன் பகவான் பஞ்சம ஸ்தானத்தில் இருந்து ரண ருண ரோக ஸ்தானத்திற்க்கு மாறுகிறார். 
05-12-2021 அன்று சுக்ர பகவான் ரண ருண ரோக ஸ்தானத்தில் இருந்து களத்திர ஸ்தானத்திற்க்கு மாறுகிறார். 
06-12-2021 அன்று செவ்வாய் பகவான் சுக ஸ்தானத்தில் இருந்து பஞ்சம ஸ்தானத்திற்க்கு மாறுகிறார். 
28-12-2021 அன்று புதன் பகவான் ரண ருண ரோக ஸ்தானத்தில் இருந்து களத்திர ஸ்தானத்திற்க்கு மாறுகிறார். 
 
பலன்:
மற்றவர்கள் மீது பரிவுகாட்டும் குணமுடைய கடகராசியினரே நீங்கள் திடீரென்று உணர்ச்சி வசப்படக் கூடியவர். இந்த காலகட்டத்தில் சாமர்த்தியமான பேச்சின் மூலம் காரியங்களை சாதித்துக் கொள்வீர்கள். பணம் வருவது அதிகரிக்கும். வாழ்க்கையில் முன்னேற்றம் காண்பதற்கான வாய்ப்புகள் வரும். வெளியூர் பயணங்கள் சாதகமான பலன் தரும். மற்றவர்களின் நலனுக்காக வாதாடி வெற்றி பெறுவீர்கள். கவுரவம், அந்தஸ்து உயரும்.
 
தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். பழைய பாக்கிகள் வசூலாகும். ஆர்டர்கள் வருவது திருப்திகரமாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இடமாற்றம் உண்டாகலாம். புதிய பொறுப்புகள் கிடைக்கும்.
 
குடும்பத்தில் சுக சௌக்கியம் உண்டாகும். நீண்ட நாட்களாக இருந்த பிரச்சனைகள் தீரும். கணவன் மனைவிக்கிடையே அன்பான நிலை காணப்படும். பிள்ளைகளின் அறிவு திறமை வெளிப்படும்.  
 
பெண்களுக்கு அடுத்தவர்கள் பிரச்சனையை தீர்த்து வைப்பீர்கள். பயணங்கள் சாதகமான பலன் தரும். பொறுப்புகள் கூடும். 
 
கலைத்துறையினர் சற்று எச்சரிக்கையுடன் செயல்படுவது உங்களுக்கு எதிர்காலத்தில் ஏற்பட இருக்கும் பிரச்சனைகளை தவிர்க்க வழிவகை செய்யும். 
 
அரசியல்வாதிகள் கவனமுடன் செயல்பட்டால் மேலிடத்தின் நன்மதிப்பைப் பெறுவீர்கள். உங்களிடம் உதவி கேட்டு வருபவர்களை உதாசீனப் படுத்தாதீர்கள். 
 
மாணவர்களுக்கு பாடங்களை படிப்பதில் திருப்தி உண்டாகும். கல்வி தொடர்பான பயணங்கள் செல்ல நேரிடலாம். 
 
புனர்பூசம் 4ம் பாதம்:
இந்த மாதம்  உங்களது காரியங்களுக்கு இருந்த எதிர்ப்புகள் விலகும். பணவரத்து திருப்தி தரும். மனகுழப்பம் நீங்கும். மாணவர்கள் பாடங்கள் படிக்க வேண்டுமே என்ற கவலைகுறையும். சக மாணவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். காரியங்களை சாதிப்பீர்கள். சாமர்த்தியமாக பேசி காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள்.
 
பூசம்:
இந்த மாதம்  நீண்ட தூரத்தில் இருந்து வரும் தகவல்கள் நன்மையாக இருக்கும். கூர்மையான மதி நுட்பத்தால் எந்த பிரச்சனையையும் எளிதாக தீர்த்து விடுவீர்கள். பூர்வீக சொத்துக்களில் இருந்த தகராறுகள் நல்லமுடிவுக்கு வரும். தொழில் வியாபாரம் திருப்திகரமாக நடக்கும். பார்ட்னர்கள் ஒத்துழைப்புடன் வியாபாரத்தை விரிவாக்கம் செய்ய முற்படுவீர்கள்.
 
ஆயில்யம்:
இந்த மாதம்  கடிதம் மூலம் வரும் தகவல்கள் நல்ல தகவல்களாக இருக்கும். வர வேண்டிய பணம் வந்து சேரும். கஷ்டங்கள் குறையும். மாணவர்களுக்கு  கல்வியில் வெற்றி பெற எடுக்கும் முயற்சிகள் சாதகமாக பலன் தரும். எதிலும் வேகமாக செயலாற்ற வேண்டும் என்ற எண்ணம் தோன்றும்.
 
பரிகாரம்: துர்க்கை அம்மனை செவ்வாய் அல்லது வெள்ளிக்கிழமையில் எலுமிச்சை தீபம் ஏற்றி வழிபட எதிர்ப்புகள் விலகும். காரிய தடை நீங்கும். 
அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள் - புதன் - வியாழன்
சந்திராஷ்டம தினங்கள்: 10, 11
அதிர்ஷ்ட தினங்கள்: 4, 5, 31

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்