டிசம்பர் மாத ஜோதிடப் பலன்கள்: சிம்மம்

சனி, 30 நவம்பர் 2019 (18:20 IST)
டிசம்பர் மாத ஜோதிடப் பலன்கள்: சிம்மம்

கிரகநிலை:
தைரிய ஸ்தானத்தில்  புதன், செவ்வாய் -  சுக  ஸ்தானத்தில்  சூர்யன்  -   பஞ்சம ஸ்தானத்தில்  சுக்ரன், குரு, சனி , கேது  - ரண, ருண ஸ்தானத்தில் சந்திரன் -   லாப ஸ்தானத்தில்  ராஹூ என கிரகங்கள் வலம் வருகின்றன.

கிரகமாற்றங்கள்:
3-Dec-19 அன்று பகல் 11.50 மணிக்கு  புதன் பகவான் சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
16-Dec-19 அன்று இரவு 8.57 மணிக்கு சூரிய பகவான்  பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
17-Dec-19 அன்று இரவு 8.36 மணிக்கு சுக்கிர பகவான் ரண ருண ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
21-Dec-19 அன்று பகல் 2.54 மணிக்கு  புத பகவான் பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
28-Dec-19 அன்று பகல் 12.45 மணிக்கு செவ்வாய் பகவான் சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
பலன்:
அதிகார மிடுக்கும், தயாள குணமும் கொண்ட சிம்மராசியினரே இந்த மாதம் மனதில் இருந்த டென்ஷன் குறையும். உடல் ஆரோக்கியம் உண்டாகும். விரும்பிய படி காரியங்கள் நடக்கும். நீண்ட தூர தகவல்கள் நல்ல தகவல்களாக இருக்கும். நிறைய ஆடை, ஆபரணங்களை வாங்கி மகிழ்வீர்கள். சொந்தமாக வீடு வாங்க வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கும். இருக்கும் வீட்டை அழகுபடுத்தி அனைவரின் பாராட்டையும் பெறுவீர்கள்.

குடும்பத்தில் அமைதியான சூழ்நிலை காணப்படும். கணவன், மனைவிக்கிடையில் நெருக்கம் உண்டாகும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பிள்ளைகள் மூலம் சந்தோஷம் கிடைக்கும். கிடைக்க வேண்டியவை அனைத்தும் உங்களுக்கு கிடைத்துவிடும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த பணபாக்கிகள் வசூலாகும்.

தொழில் வியாபாரத்திற்கு தேவையான பண உதவி கிடைக்கும். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். புதிய ஆர்டர்கள்  கிடைப்பதில் சாதகமான நிலை காணப்படும்.  உத்தியோகத்தில் இருப்பவர்கள் நினைத்ததை சாதிக்க வேண்டும் என்ற வேகத்தில் பணிபுரிவார்கள்.  சிலருக்கு புதிய பதவி அல்லது புதிய பொறுப்புகள் கிடைக்க பெறுவார்கள்.

கலைத்துறையினருக்கு ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். இழுபறியாக இருந்த காரியம் சாதகமாக முடியும். வரவேண்டிய பணம் வந்து சேரும். செயல் திறமை அதிகரிக்கும். நண்பர்கள் ஆதரவு கிடைக்கும்.

அரசியல் துறையினருக்கு எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது. சுலபமாக முடிந்துவிடும் என்று நினைக்கும் காரியம் கூட சற்று தாமதமாகலாம். அரசு மூலம் நடக்க வேண்டிய காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கலாம்.

பெண்களுக்கு நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பணவரத்து திருப்தி தரும்.

மாணவர்களுக்கு ஆசிரியர்களிடம் நன்கு பழகி அவர்கள் நன் மதிப்பை பெறுவதுடன் பாடங்களில் இருக்கும் சந்தேகங்களையும் போக்கிக் கொள்வீர்கள். புத்தகங்களை கவனமாக வைத்துக் கொள்வது நல்லது.

மகம்:
இந்த மாதம் வீண் மனசஞ்சலம் ஏற்பட்டு நீங்கும். உடமைகளை கவனமாக பாதுகாத்துக் கொள்வது நல்லது. மாணவர்களுக்கு கல்வி பற்றிய வீண்பயம் ஏற்பட்டு நீங்கும். வாகனங்களை கவனமாக வைத்துக் கொள்வது நல்லது. ஆடம்பரமான வீடு, வாகனம் இவற்றை மாற்றி அமைப்பீர்கள். உங்களுக்கு அனைவரின் ஆதரவும், அரவணைப்பும் கிட்டும். வெளிநாடுகளில் இருந்து அழைப்புகள் வரலாம்.

பூரம்:
இந்த மாதம் எப்பொழுதும் பரபரப்பாக காணப்படுவீர்கள். பணவரவு கூடும். செய்யும் காரியத்தில் மனதிருப்தி கிடைக்கும். அடுத்தவர்களுக்காக  எந்த பொறுப்பையும் ஏற்காமல் இருப்பது நல்லது.  மற்றவர்களுக்காக  வீண் அலைச்சல், செலவு செய்ய வேண்டி இருக்கும். மாணவர்களுக்கு விளையாட்டுப் போட்டிகள், பேச்சுப் போட்டிகள் போன்றவற்றில் பரிசுகள் கிடைக்க வாய்ப்புள்ளது.

உத்திரம் 1ம் பாதம்:
இந்த மாதம் தொழில் வியாபாரம் திருப்திகரமாக நடந்தாலும்  எதிர்பார்த்த லாபம் குறையலாம். வியாபாரம் தொடர்பான பணம் பரிவர்த்தனையில் கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் எவ்வளவு  உழைத்தாலும் எதிர்பார்த்த பலன் கிடைப்பதில்  தாமதம் உண்டாகும். முக்கிய விசயங்களில் முடிவெடுக்க பெரியோரின் ஆலோசனையை கேட்டு நடந்து கொள்வது எதிர்காலத்திற்கு உதவும்.

பரிகாரம்: தினமும் சிவபுராணம் படியுங்கள்.
அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, திங்கள்
சந்திராஷ்டம தினங்கள்: 6, 7
அதிர்ஷ்ட தினங்கள்: 26, 27

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்