ஆகஸ்ட் மாத ஜோதிடப் பலன்கள்: கடகம்

புதன், 31 ஜூலை 2019 (15:38 IST)
ஆகஸ்ட் மாத ஜோதிடப் பலன்கள்: கடகம் (புனர் பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்)
 

கிரகநிலை:
ராசியில் சூரியன், சந்திரன், செவ்வாய், சுக்கிரன் - பஞ்சம ஸ்தானத்தில்  குரு (வ)  - ரண ருண ரோக ஸ்தானத்தில் சனி (வ), கேது - விரைய ஸ்தானத்தில் புதன்,  ராஹூ என கிரகங்கள் வலம் வருகின்றன.

கிரக மாற்றங்கள்:
இம்மாதம் 3ம் தேதி புதன் பகவான் விரைய ஸ்தானத்திலிருந்து ராசிக்கு மாறுகிறார்.
இம்மாதம் 7ம் தேதி பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் குரு பகவான் வக்ர நிவர்த்தி அடைகிறார்.
இம்மாதம் 10ம் தேதி செவ்வாய் பகவான் ராசியிலிருந்து தனவாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
இம்மாதம் 17ம் தேதி சூரியன் பகவான் ராசியிலிருந்து தனவாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
இம்மாதம் 17ம் தேதி சுக்கிரன் பகவான் ராசியிலிருந்து தனவாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
இம்மாதம் 21ம் தேதி புதன் பகவான் ராசியிலிருந்து தனவாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு மாறுகிறார். 

பலன்: 
தடைகளை தகர்த்தெறியும் குணமுடைய கடக ராசி அன்பர்களே, இந்த மாதம் பல வகையிலும் நற்பலன்களை அள்ளித் தரும். தெய்வபக்தி அதிகரிக்கும். பயணங்கள் மகிழ்ச்சி தரும்.  மனதில் சுய நம்பிக்கை அதிகரிக்கும்.  எதிலும் கவனமாக பேசுவது நல்லது. வீண் பழி உண்டாகலாம்.

தொழில் வியாபாரத்தில் திடீர் தடைகள் ஏற்பட்டு நீங்கும். வாடிக்கையாளர்களை திருப்திபடுத்த கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். பங்குதாரர்களுடன் இருந்து வந்த நீண்ட நாள் பிரச்சனைகள் ஒரு சுமூக முடிவிற்கு வரும்.  உங்கள் வியாபாரத்தை விருத்தி செய்து கொள்வீர்கள்.

குடும்பத்தில் நிம்மதி குறையும்படியான ஏதாவது சம்பவங்கள் நடக்கலாம். கணவன், மனைவிக்கிடையே மன வருத்தம் ஏற்படலாம். பிள்ளைகள் நலனில் அக்கறை தேவை. நண்பர்கள் உறவினர்களிடம் கவனமாக பேசி பழகுவது நல்லது. தாய், தந்தையின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உடல்நலனைப் பொறுத்தவரை நீர் சம்பந்தமான பிரச்சனைகள் வரலாம்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் மிகவும் கவனமாக பணிகளை மேற்கொள்வது நல்லது. மேல் அதிகாரிகள் மற்றும் சக ஊழியர்களை அனுசரித்து செல்வது நன்மை தரும். மேலிடத்திலிருந்து உங்களுக்கு பொறுப்புகளை அதிகரிக்கலாம். பணி நிமித்தமாக வெளியூர் சென்று தங்க வேண்டி வரலாம்.

கலைத்துறையினருக்கு வெளிநாட்டு வாய்ப்புகள் கை கூடி வரும். அதிகமான ஒப்பந்தங்களில் கையெழுத்திட வேண்டி வரும். உடன் பணிபுரியும் பணியாளர்களால் நன்மை ஏற்படும்.

அரசியலில் உள்ளவர்களுக்கு வீண் பேச்சை குறைப்பது நல்லது. எடுத்த காரியங்களை செய்து முடிப்பதில் தாமதம் உண்டாகலாம்.

பெண்களுக்கு அடுத்தவர்கள் பொறுப்புகளை ஏற்காமல் தவிர்ப்பது நல்லது. எதிர்பாராத செலவுகள் வரலாம். விருந்து கேளிக்கை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். ஆன்மீக பயணம் செல்வதில் விருப்பம் உண்டாகும்.

மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலன் தரும். சக மாணவர்களுடன் நல்லுறவு காணப்படும்.

புனர் பூசம் 4ம் பாதம்:
இந்த மாதம் புதிய சுபகாரிய முயற்சிகள் சில தடைகளுக்குப்பின் நிறைவேறும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் அன்றாடப் பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்படும் ஆற்றலைப் பெறுவீர்கள். புத்திரவழியில் மகிழ்ச்சி நிலவும்.

பூசம்:
இந்த மாதம் முயற்சிகளில் தடை தாமதங்களைச் சந்திக்க நேரிடும் என்றாலும் எதிலும் எதிர்நீச்சல் போட்டாவது முன்னேறிவிடுவீர்கள்.  கணவன்-மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது.  உற்றார்-உறவினர்களின் ஆதரவு ஓரளவுக்கு திருப்தியளிக்கும்.

ஆயில்யம்:
இந்த மாதம் பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது, முடிந்தவரை பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாதிருப்பது உத்தமம். சுபகாரிய முயற்சிகளில் தடைகளுக்குப்பின்பே அனுகூலப்பலனை அடைவீர்கள். பணவரவுகள் ஓரளவுக்கு திருப்தியளிப்பதாக இருந்தாலும் பணவிஷயத்தில் பிறருக்கு முன்ஜாமீன் கொடுப்பது, வாக்குறுதி கொடுப்பது போன்றவற்றைத் தவிர்க்கவும்.                                  

பரிகாரம்: அபிராமி அந்தாதி துதி பாடி அம்மனை வணங்கி வர குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். காரிய அனுகூலம் ஏற்படும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, திங்கள்
சந்திராஷ்டம தினங்கள்: 6, 7, 8
அதிர்ஷ்ட தினங்கள்: 26, 27

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்