ஐப்பசி மாத ராசி பலன்கள் 2023 – மீனம்

புதன், 18 அக்டோபர் 2023 (10:49 IST)
மீனம் (பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)


கிரகநிலை:
ராசியில் ராஹூ - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் குரு (வ) - ரண ருண ரோக ஸ்தானத்தில் சுக்ரன் - களத்திர ஸ்தானத்தில் கேது - அஷ்டம ஸ்தானத்தில் சூர்யன், செவ்வாய், புதன் - பாக்கிய ஸ்தானத்தில் சந்திரன் - லாப ஸ்தானத்தில் சனி (வ) என கிரக நிலைகள் உள்ளன.

கிரகமாற்றம்:
01-11-2023 அன்று புதன் பகவான் அஷ்டம ஸ்தானத்தில் இருந்து பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
02-112023 அன்று சுக்ர பகவான் ரண ருண ரோக ஸ்தானத்தில் இருந்து களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:
எதிர்காலத்தை மனதில் கொண்டு செயல்பட்டு வரும் மீன ராசியினரே நீங்கள் காலத்தை  வீணாக்க மாட்டீர்கள். இந்த மாதம் அனைத்து விதமான நலங்களையும் பெறப் போகிறீர்கள். சுப நிகழ்ச்சிகளுக்கு பஞ்சமிருக்கது. விருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். இட மாற்றம் ஏற்படும். எடுத்த காரியம் தாமதப்படுகிறதே என்ற கவலை உண்டாகும். இரவில் நீண்ட நேரம் கண் விழிக்க வேண்டி வரலாம் கவனம் தேவை.

குடும்பத்தில் இருப்பவர்களால் இருந்த மனவருத்தம் நீங்கும். வாழ்க்கை துணையின் உடல் நிலையில் கவனம் தேவை. வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவதன் மூலம் செலவு கூடும். விருந்தினர் வருகை இருக்கும். புதிய முடிவுகள் எடுப்பதில் தயக்கம் உண்டாகும். பழைய பாக்கிகள் வசூலாவதில் தாமதம் உண்டாகலாம். பிள்ளைகள் வழியில் செலவு உண்டாகலாம். பண விஷயத்தில் கவனமாக இருப்பது நல்லது. 

தொழில் வியாபாரம் எதிர்பார்த்ததை விட அதிகமான லாபம் தரும். ஆனால் தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் எப்போதும் பிசியாக காணப்படுவார்கள். செலவுகள் கூடும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். கடன் விவகாரங்களில் கொடுக்கல் வாங்கலிலும் எச்சரிக்கை தேவை. பொறுப்புகள் கூடும்.

பெண்களுக்கு பயணங்கள் செல்ல நேரிடலாம். எடுத்த வேலையை செய்து முடிக்க காலதாமதமாகலாம். வழக்கத்தை விட கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். கலைத்துறையில் இருப்பவர்களுக்கு மிகுந்த உகந்த காலகட்டமிது. கைக்கு எட்டிய அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்தி முன்னேற்றப் பாதையில் செல்வீர்கள்.

அரசியல்வாதிகள், சமூக சேவகர்களுக்கு பலன்கள் நன்மை தீமை என கலந்து கிடைத்தாலும் சிறப்பாக இருக்கும். எந்த ஒரு வேலையை செய்யும் போதும் கூடுதல் கவனத்துடன் செய்வது நல்லது. செலவு அதிகரிக்கும். மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற கூடுதல் நேரம் பாடங்களை படிப்பது நல்லது. பொறுப்புகள் அதிகரிக்கும்.

பூரட்டாதி 4ம் பாதம்:
இந்த மாதம் குடும்பத்தில் நிம்மதி குறையும் படியான சூழ்நிலை உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே வீண் வாக்குவாதங்கள் ஏற்படலாம். பிள்ளைகள் நலனில்  அக்கறை காண்பீர்கள். உடல்களைப்பும், சோர்வும் உண்டாகலாம். கவனமாக இருப்பது நல்லது.  பெண்களுகள் எந்த காரியத்தில் ஈடுபடும் போதும் யோசித்து செயல்படுவது நல்லது. வீண் அலைச்சல் ஏற்படலாம். செலவு கூடும். மாணவர்களுக்கு  விளையாட்டில் ஆர்வம் உண்டாகும். பாடங்களை கவனமாக படிப்பது முன்னேற்றத்துக்கு உதவும். 

உத்திரட்டாதி:
இந்த மாதம் குடும்பத்தில் அமைதி உண்டாகும்.  பணவரத்து திருப்திகரமாக இருக்கும். வாக்கு வன்மை ஏற்படும்.  விருந்து கேளிக்கை  நிகழ்ச்சியில்  கலந்து கொள்வீர்கள். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். பலவகை யோகம் உண்டாகும். புண்ணிய ஸ்தலங்களை தரிசிக்கும் எண்ணம் ஏற்படும். சிலர் யாத்திரை செல்வார்கள். அடுத்தவர்கள் உதவி கிடைக்கும். தொழில் வியாபாரம் நன்றாக  நடக்கும். எதிர்பார்த்த ஆர்டர்கள்  வந்து சேரும். அரசு மூலம் நடக்க வேண்டிய காரியங்களை சாதகமாக முடியும்.

ரேவதி:
இந்த மாதம் உத்தியோகத்தில் இருப்பவர்கள்  புத்திசாதூரியத்துடன் நடந்து கொண்டு நன்மை அடைவார்கள்.  எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கக் கூடும். குடும்பத்தில் இதமான  சூழ்நிலை காணப்படும். புதிய வீடு கட்டுவது, பழைய வீட்டை புதுப்பிப்பது போன்ற பணிகளை தொடங்க முற்படுவீர்கள். கணவன் மனைவிக்கிடையே மகிழ்ச்சி நிலவும். பிள்ளைகளால் பெருமை சேரும். அவர்களுக்கு தேவையானவற்றை வாங்கி கொடுத்து மகிழ்ச்சியில் ஆழ்த்துவீர்கள். 

பரிகாரம்: தினம்தோறூம் அருகிலிருக்கும் முருகன் கோவிலுக்குச் சென்று வலம் வருவது.
அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், வியாழன்;
சந்திராஷ்டம தினங்கள்: நவ 12, 13
அதிர்ஷ்ட தினங்கள்: நவ 4, 5, 6

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்