இந்த ராசிக்காரர்களுக்கு வியாபார போட்டி குறையும்! - இன்றைய ராசி பலன் (12.08.2024)!

Prasanth Karthick

திங்கள், 12 ஆகஸ்ட் 2024 (06:01 IST)
இன்று உங்களுடைய ராசியின்படி உங்களுக்கான நாள் எப்படி இருக்கிறது என்று தெரிந்துக்கொள்ளுங்கள்.


 
மேஷம்
இன்று சிலருக்கு மனதில் நினைத்தவரையே கைப்பிடிக்கும் யோகம் உண்டாகும். திருமண சுபகாரியங்கள் தடபுடலாக கைகூடும். கொடுக்கல்-வாங்கல் சரளமான நிலையில் நடைபெறும். கொடுத்த கடன்களும் தடையின்றி வசூலாகும். மாணவர்கள் கல்வியில் ஈடுபாட்டுடன் செயல்பட்டு வெற்றிக்கனியினைப் பறிப்பார்கள்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

ரிஷபம்
இன்று கலைஞர்களுக்கு வாய்ப்புகள் தேடிவரும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகள் கிட்டும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். சனிக்குரிய பரிகாரங்களைத் தொடர்ந்து செய்வது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம், மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 4, 6

மிதுனம்
இன்று பொருளாதார ரீதியாக முன்னேற்றமான பலன்கள் உண்டாகும்.  எதிர்பாராத திடீர் தனசேர்க்கைகளும் கிடைக்கப்பெறும். குடும்பத்திலிருந்த கருத்து வேறுபாடுகள் விலகி கணவன்-மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். பிரிந்த உறவினர்களும் தேடிவந்து ஒற்றுமை பாராட்டுவார்கள்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 3, 5

கடகம்
இன்று பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் புதிய நவீன பொருட்சேர்க்கைகளும், ஆடை ஆபரணமும் சேரும். பூர்வீக சொத்துகளால் கூடுதல் லாபம் உண்டாகும். வீடு, மனை, பூமி வாங்கும் யோகம் உண்டாகும். புத்திரவழியில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, பிரவுன்
அதிர்ஷ்ட எண்கள்: 2, 6

சிம்மம்
இன்று  சிலருக்கு நினைத்தவரையே கைப்பிடிக்கக் கூடிய யோகம் உண்டாகும்.  எதிலும் சற்று சிந்தித்துச் செயல்படுவது உத்தமம். தொழில், வியாபார ரீதியாக இருந்து வந்த கடந்த கால பிரச்சினைகள் விலகி நல்ல லாபத்தையும் ஏற்றத்தையும் பெறுவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெளிர் பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 6

கன்னி
இன்று கடன்கள் அனைத்தும் படிப்படியாகக் குறைந்து மனநிம்மதி உண்டாகும். சில நேரத்தில்  தேவையற்ற சோதனைகளை சந்திக்க நேரிடும்.  தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு மறைமுக எதிர்ப்புகள் அதிகரித்து லாபம் குறையும். வரவேண்டிய ஆர்டர்களும் தடைப்படும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 9

துலாம்
இன்று எந்தவொரு காரியத்தையும் முழுமையாகச் செய்துமுடிக்க இயலாதபடி தாமதநிலை உண்டாகும். எதிர்பார்க்கும் கடனுதவிகளும் தாமதப்படும். பலவகையில் நெருக்கடிகள் அதிகரிக்கும். குடும்பத்திலும் வீணான சண்டை சச்சரவுகள் ஏற்படும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 6, 9

விருச்சிகம்
இன்று எவ்வளவுதான் பாடுபட்டாலும் நல்ல பெயரை எடுக்க முடியாத நிலை உண்டாகும். உற்றார்- உறவினர்களே தேவையற்ற பிரச்சினைகளை உண்டாக்குவார்கள். கடன்காரர்களும் மிகவும் தொல்லை கொடுப்பார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு அதிகரித்து உடல்நிலை சோர்வடையும்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 3, 9

தனுசு
இன்று பிறர்செய்யும் தவறுகளுக்கும் நீங்களே பொறுப்பேற்க வேண்டி இருப்பதால் வீணான பழிச்சொல் உண்டாகும். கலைஞர்களுக்கு புதிய வாய்ப்புகள் கைநழுவி பொருளாதாரத் தடைகள் உண்டாகும். சனிக்கிழமைதோறும் சனிக்குப் பரிகாரம் செய்வது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 1, 5

மகரம்
இன்று நன்மை, தீமை கலந்த பலன்களைப் பெறுவீர்கள். குடும்பத்திலிருந்த மருத்துவச் செலவுகள் படிப்படியாகக் குறையும். உற்றார்- உறவினர்கள் தக்கசமயத்தில் உதவுவார்கள். தேவையற்ற செலவுகளைக் குறைத்துக்கொள்வதால் கடன்களைத் தவிர்க்கலாம்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 5, 6

கும்பம்
இன்று சுபகாரிய முயற்சிகளை மேற்கொண்டால் சில தடைகளுக்குப்பின் கைகூடும். கொடுக்கல்-வாங்கலில் பெரிய தொகை கடனாகக் கொடுப்பதைத் தவிர்த்து சிந்தித்துச் செயல்பட்டால் ஓரளவுக்கு லாபம் கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 2, 7

மீனம்
இன்று உத்தியோகஸ்தர்களுக்குக் கௌரவமான பதவி உயர்வுகள் கிடைத்தாலும் வேலைப்பளுவைக் குறைத்துக்கொள்ள இயலாது. உடன் பணிபுரிபவர்களின் ஆதரவுகள் சுமாராகவே இருக்கும். தொழில், வியாபாரத்தில் சற்று மந்தநிலை ஏற்படும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
அதிர்ஷ்ட எண்: 2, 9 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்