இன்று அதிர்ஷ்டத்தை பெறும் ராசிக்காரர்கள் !! - 16/09/2020

புதன், 16 செப்டம்பர் 2020 (08:35 IST)
பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோதிடர் கணித்த இன்றைய ராசிபலன்கள். 12 ராசிகளுக்கான இன்று அதிர்ஷ்டத்தை பெறும் ராசிக்காரர்கள் யார் என்பதை அறிந்து  கொள்ளலாம்.


1. ரிஷபம்:
 
இன்று ரிஷப ராசிக்காரர்களுக்கு பாராட்டுகளும் விருதுகளும் கிடைக்கும். மத நம்பிக்கை அதிகரிக்கும். ஆன்மீக நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். பிள்ளைகளால் சந்தோஷம் அதிகரிக்கும்.
 
2. மிதுனம்:
 
இன்று மிதுன ராசிக்காரர்களுக்கு உத்தியோகம் சிறக்கும். உங்கள் தொழில் மூலம் பணவரவு அதிகரிக்கும். வியாபாரிகள் பெருத்த லாபம் அடைவர்.
 
3. சிம்மம்:
 
இன்று சிம்ம ராசிக்காரர்களுக்கு குடும்பங்களில் குழந்தை பாக்யம் சந்தோஷப்படுத்தும். அரசுத் துறையில் பணி இடை நீக்கம் பெற்றவர்கள் மீட்சி பெறுவர். மனைவி வழியில் அனுகூலம் உண்டு.
 
4. கன்னி:
 
இன்று கன்னி ராசிக்காரர்களுக்கு குடும்பத்தில் உங்களுக்கு பெரிய பொறுப்பு தேடி வரும். ஆன்மீக சொற்பொழிவுகள், உபன்யாசங்கள் செய்வோருக்கு உகந்த  காலமாகும்.
 
5. கும்பம்:
 
இன்று கும்ப ராசிக்காரர்களுக்கு மருத்துவ தொழிலில் இருப்பவர்களுக்கு ஆதாயம் கிடைக்கும். கலைஞர்கள் ரசிகர்களால் போற்றப்படுவார்கள். மாணவர்களுக்கு  பரிசுகளும் பாராட்டுதல்களும் கிடைக்கும்.
 
6. மீனம்:
 
இன்று மீன ராசிக்காரர்களுக்கு வழக்குகள் வெற்றியை தரும். புதிய வீடு கட்டும் முயற்சி நிறைவேறும். வாகனம் வாங்குவீர்கள். முயற்சிகள் அனைத்தும்  வெற்றியாகும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்