நரேந்திர மோடி இந்தியாவின் பிரதமராக ஆகும் வாய்ப்பு உள்ளதா?
வெள்ளி, 2 டிசம்பர் 2011 (20:18 IST)
ஜோதிட ரத்னா முனைவர் க.ப.வித்யாதரன்: நரேந்திர மோடி விருச்சிக ராசி, அனுஷ நட்சத்திரத்தில் பிறந்திருக்கிறார். தற்பொழுது அவருக்கு ஏழரைச் சனி தொடங்குகிறது. இது அவருக்கு ஆகாத காலகட்டம். ஏனென்றால், இந்தக் காலகட்டத்தில் பெயர் கெடுதல், புகழ் குறைதல், உடல் நலக்குறைவு ஏற்படுதல், தவிர அவரை யாராவது தாக்குவதற்கு முற்படுதல் - ஏனென்றால் 6ஆம் இடத்தில் குரு இருக்கிறது. இதனை சகட குரு என்று சொல்வார்கள்.
தசா புக்தி அமைப்புகளைப் பார்க்கும் போதும் அவருக்குச் சில சங்கடங்கள், சிக்கல்களெல்லாம் உண்டு. ஆனால், அதேநேரத்தில் அடுத்த வருடம் மே மாதத்தில் இருந்து அவருக்கு நல்ல காலகட்டம் வருகிறது. ஆனால் பிரதமர் பதவி என்று பார்க்கும் போது, அதில் ஒரு சில கிரகங்கள் அவருக்கு பலவீனமாகத்தான் இருக்கிறது. மாநிலத்தை ஆளுவதற்கு ஒரு கிரக அமைப்பு உண்டு. ஒரு பரந்துபட்ட தேசத்தை ஆள்வதற்கு ஒரு கிரக அமைப்பு என்று உண்டு.
தற்போது அவர் ஆள்வது தாய் மாநிலம். ஆனால், தாய்நாட்டையே ஆள்வதற்கான கிரக அமைப்புகள் அவருக்கு கொஞ்சம் குறைவாக இருக்கிறது. அதனால், இந்தக் காலகட்டத்தில் அதற்கான சாத்தியக்கூறுகள் கிடையாது. ஆனால், தேர்தல் தேதிகளை வைத்து அந்த நேரத்தில் உள்ள தசா புக்திகளை அடிப்படையாக வைத்தும் அந்த நேரத்தில் பார்க்க வேண்டும். ஆனால், தற்பொழுது இருக்கும் காலகட்டம் அவருக்கு சாத்தியமாக இல்லை.