‌சிவ‌ன் கோ‌யிலை வல‌ம் வருவ‌து கேரளா‌வி‌ல் வேறுபடுவது ஏ‌ன்?

சனி, 30 ஜூலை 2011 (21:05 IST)
த‌மி‌ழ்.வெ‌ப்து‌னியா.கா‌ம்: கேரள மாநிலத்தில் சிவன் கோயிலை வலம் வரும் போது, கோபிகை என்று சொல்லக்கூடிய இடத்திற்குப் போகும் கங்கையை தாண்டாமல், மீண்டும் திரும்பி வந்துவிட்டு வலம் வருகிறார்கள். ஆனால் தமிழ்நாட்டில் பார்த்தால், பிரதோஷ வலம் வருகிறவர்கள் மட்டும்தான் அந்த மாதிரி திரும்பி வருகிறார்கள் தவிர, மற்றவர்களெல்லாம் தாண்டி சுற்றித்தான் வருகிறார்கள். இதை தோஷம் என்று கேரளாவில் சொல்கிறார்கள். ஆனால் நாம் அதுபோலக் கருதுவதில்லை. சிவன் கோயிலில் அபிஷேகம் செய்து கோமுகி என்று சொல்வோமே அது ஊற்றுகிறதல்லவா, அதைத் தாண்டக்கூடாது என்று சொல்கிறார்கள் என்று சொல்கிறார்கள் கேரளாவில். அப்படி செய்தால் தோஷம். அதனால் திரும்பி வந்துதான் அவர்கள் கும்பிடுகிறார்கள். நம்மையும் அப்படித்தான் கும்பிடச் சொல்கிறார்கள். சில இடங்களில் தடுப்பையே போட்டு வைத்துவிடுகிறார்கள். அதைத் தாண்ட முடியாதபடி. ஆனால் தமிழ்நாட்டில் அதுபோன்று எதுவும் இல்லை. நாம் தாண்டி சுற்றியெல்லாம் வருகிறோம். ஆனால் பிரதோஷத்திற்கு மட்டும் தாண்டாமல் திரும்பி வருகிறோம். இதுபோன்ற வேறுபாடு ஏன் ஒரு குறுகிய நிலப்பகுதியிலேயே இருக்கிறது.

ஜோ‌திர‌த்னமுனைவ‌ர் க.ப.‌வி‌த்யாதர‌ன்: கேரள மக்களுடைய ஆகம விதி கொஞ்சம் வித்தியாசமானது. நாம் அதிகமான ஸ்லோகங்களைச் சொல்வோம். அவர்கள் அதிகமாக முத்திரைகளைத்தான் போடுவார்கள். எல்லா முத்திரைகளையும் அவர்கள் கையால் போடுவதைப் பார்த்தால் பிரமாண்டமாக இருக்கும். சோழர் காலத்தில் இருந்தே தாண்டிப் போகக்கூடாது என்றெல்லாம் ஒன்றும் கிடையாது. என்னவென்றால், அதன் ஒரு துளி எடுத்து சிரசில் தேய்த்துக்கொண்டு தாண்டி வரலாம். வட பகுதியில் ஆவுடையாரில் இருந்து வழிகிறதல்லவா, அதை எடுத்து சிரசில் எடுத்து தடவிக்கொண்டு வலம் வரலாம். அதனால் தவறில்லை.

வெப்துனியாவைப் படிக்கவும்