த‌ங்க‌த்‌தி‌ன் ‌விலை எ‌ப்படி போகு‌ம்?

வெள்ளி, 4 நவம்பர் 2011 (20:54 IST)
த‌மி‌ழ்.வெ‌ப்து‌னியா.கா‌ம்: வரலாறு காணாத அளவு உயர்ந்த தங்கத்தின் விலை மீண்டும் குறைந்து வருகிறது. ஆனால், அது தொடர்ந்து உயரும் என்று கூறுகிறார்கள். எப்படிப் போகும்?

ஜோ‌திட ர‌த்னா முனைவ‌ர் க.ப.‌வி‌த்யாதர‌ன்: குரு பகவான் தற்பொழுது வக்கிரமாக இருக்கிறார். குருதான் தங்கத்திற்குரிய கிரகம். அதனால் தற்பொழுது குறைந்துக் கொண்டிருக்கிறது. ஆனால், திடீரென்று இதைவிட அதிகமாக தங்கத்தின் விலை உயரப் போகிறது. ஜனவரியில் இருந்தே இந்த உயர்வை எதிர்பார்க்கலாம்.

தங்கம் என்பது இதற்குமேல் பெயர் வைக்கும் அளவிற்குதான் வரும். தங்கராசு என்றெல்லாம் பெயர் வைக்கிறார்கள் அல்லவா, அதுபோல, கையில் இருக்கிறதோ இல்லையோ பெயரளவிலாவது தங்கம் இருக்கட்டும் எ‌ன்ற அள‌வி‌ல் தங்கராசு, பொன்னி என்ற அந்த நிலைக்குத்தான் போகும்.

வெப்துனியாவைப் படிக்கவும்