தமிழ்நாடு, கேரளா இடையேயான உறவு எப்படிப் போகும்?

திங்கள், 20 பிப்ரவரி 2012 (20:34 IST)
த‌மி‌ழ்.வெ‌ப்து‌னியா.கா‌ம்: முல்லைப் பெரியாறு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளில் கேரள அரசு தமிழ்நாட்டிற்கு எதிராகவே செயல்பட்டு வருகிறது. இதே நிலை நீடித்தால் தமிழ்நாடு, கேரளா இடையேயான உறவு எப்படிப் போகும்?

ஜோ‌திர‌‌த்னமுனைவ‌ர் க.ப.‌வி‌த்யாதர‌ன்: பெரிதாக பாதிப்படைய வாய்ப்புகள் கிடையாது. வழக்கம் போல் போய்க் கொண்டிருக்கும். நதிகளுக்கு உரிய சுக்ரனுடைய வீட்டில் சனி உட்கார்ந்திருப்பதால், நதிகள் பிரச்சனை மீண்டும் பெரிதாகும்.

நீர்த்தேக்கங்களும் சனிக்குரியதுதான். அதனால் சில பாதிப்புகள் உண்டாகும். ஆனால், நீதிமன்றத்தின் தீர்ப்பால் நல்நிலைபடுத்த வாய்ப்பு இருக்கிறது. சில பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும்.

வெப்துனியாவைப் படிக்கவும்