சம‌ச்‌சீ‌ர் க‌ல்‌வி‌க்கு ஏ‌ன் இ‌ந்த ‌நிலை?

வியாழன், 26 மே 2011 (19:52 IST)
த‌மி‌ழ்.வெ‌ப்து‌னியா.கா‌ம்: தமிழ்நாட்டில் புதிய முதல்வராக பதவியேற்றுள்ள அ.இ.அ.தி.மு.க. தலைவர் ஜெயலலிதா, சமச்சீர் கல்வித் திட்டத்தை முடக்கியிருக்கிறார். அதற்கு, தரம் போதுமானதாக இல்லை என்று காரணம் சொல்கிறார். இதற்கு அரசியல் மட்டுமே காரணமா? ஜோதிட ரீதியாக எப்படிப் பார்க்கிறீர்கள்?

ஜோ‌திட ர‌த்னா முனைவ‌ர் க.ப.‌வி‌த்யாதர‌ன்: சுவாதி நட்சத்திரம், துலாம் ராசியில்தான் இவர் பொறுப்பேற்றிருக்கிறார்கள். சுவாதி நட்சத்திரம் இராகுவினுடைய நட்சத்திரம். ஏழரைச் சனியும், இராகு திசையும் இருந்து கொண்டிருக்கும் போதுதான் இவர்கள் பொறுப்பேற்றிருக்கிறார்கள். ஏற்கனவே அவருடைய ஜாதகத்திலும் ஏழரைச் சனியும், இராகு திசையும் நடந்துக் கொண்டிருக்கிறது.

அதனால், எதை எடுத்தாலும் கொஞ்சம் சிக்கலான முடிவுகளை எடுக்க வேண்டிய சூழல் வரும். கொஞ்சம் எதிர்ப்பான முடிவுகள், ஏனென்றால் இராகு தலைகீழாக சுற்றக்கூடிய கிரகம். அவருக்கும் இராகு திசை நடக்கிறது, அவர் பொறுப்பேற்றதும் இராகு திசையில்தான். அதனால் இவர் எடுக்கும் முடிவு முன்னுப் பின் முரணாகத்தான் வரும். கூடவே ஏழரைச் சனி அவருடைய சிம்ம ராசியில் நடக்கிறது. டிசம்ப‌ர் வரைக்கும் நிறைய சவால்களை அவர் எதிர்கொள்ள வேண்டிவரும்.

அதுமட்டுமல்லாமல், தொடர்ந்து அவருடைய உடல் நலமும் பாதிக்கும். அதாவது அவருடைய மன வேகத்திற்கு ஈடிணையாக அவருடைய உடல் ஒத்துழைக்க மறுக்கும். அதனால் எல்லா வகையிலும் டிசம்பர் வரைக்கும் அவர் கொஞ்சம் கவனமாகத்தான் இருக்க வேண்டும். ஜனவரியில் இருந்து ஓரளவிற்கு அவருக்கு நன்மை தரக்கூடிய அமைப்பு உண்டு. இருந்தாலும், நவம்பர் 4ஆம் தேதியிலிருந்து அவருடைய ராசிக்குள்ளேயே செவ்வாய் வந்து உட்காரப் போகிறார். அதனால் அடுத்தடுத்து அவருக்கு உடல்நலக் குறைவுகள், பாதிப்புகள் என்று இருந்துகொண்டே இருக்கும்.

புதன்தான் கல்விக்குரிய கிரகம். வித்தை, ஞானம், கல்வி இதற்கெல்லாம் உரிய கிரகம் புதன். புதனுடைய வீடுகள் மிதுனமும், கன்னியும். இந்த புதனின் ஒரு வீடான கன்னியில்தான் சனி பகவான் உட்கார்ந்திருக்கிறார். சனி என்றைக்கு கல்விக்குரிய புதன் வீட்டில் வந்து நுழைந்தாரோ அதிலிருந்து மெட்ரிக் கல்வி, சமச்சீர் கல்வி பிரச்சனைகள் தொடங்கிவிட்டது. இந்தப் பிரச்சனைகள் டிசம்பர் வரைக்குமே இருக்கும். ஜோதிடப் பூர்வமாக பார்க்கும் போது, புதன் வீடுகளில் வந்து சனி பகவான் உட்காரும் போதெல்லாம் இந்த மாதிரியான பாதிப்புகளெல்லாம் ஏற்படும்.

சனிக்கு மந்தம் என்று ஒரு பெயர் உண்டு. தற்போது பள்ளிக் கூடங்களே மந்தமாக, தள்ளப்பட்டு தாமதமாகத் திறக்கப்படுகிறது பாருங்கள். இதெல்லாம் சனியினுடைய முழுமையான ஆதிக்கம்தா‌ன் காரண‌ம். அதனால் டிசம்பர் வரைக்கும் கல்வித் துறையில் சலசலப்புகள், தீர்வு காண முடியாத நிலை, அதிருப்திகரமான நிலை போன்று தொடரும். அதனால் மெட்ரிக்குக்கும், பெற்றோருக்கும் இடையேயான பிரச்சனைகள், போராட்டங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கும். அடுத்த கல்வியாண்டில் வேண்டுமானால் இதற்கான நிரந்தரத் தீர்வுகள், முடிவுகள் ஜோதிடப்பூர்வமாக ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்