காஷ்மீர் பிரச்சனை எப்படிப் போகும்?

புதன், 15 செப்டம்பர் 2010 (17:47 IST)
த‌மி‌ழ்.வெ‌ப்து‌னியா.கா‌ம்: தற்பொழுதுள்ள முக்கியமான அரசியல் பிரச்சனை என்று எடுத்துக்கொண்டால் காஷ்‌மீரில் அமைதியின்மை. கலவரம், அங்கிருக்கும் காவல்படைகளை வெளியேறச் சொல்லி மக்கள் நடத்தும் போராட்டம், கல் வீச்சு இதெல்லாம் நடந்து கொண்டிருக்கிறது. இது எந்த அளவிற்கு அந்த நாட்டி‌ன் எதிர்காலத்தைப் பாதிக்கும். எப்படிப் போகும் இந்த காஷ்மீர் பிரச்சனை?

ஜோ‌திர‌த்னமுனைவ‌ர் க.ப.‌வி‌த்யாதர‌ன்: இந்திய அமைப்பை வைத்துப் பார்க்கும் போது வடகிழக்கில் அந்த மாநிலம் வருகிறது. நாட்டின் வடகிழக்குப் பகுதியில் உயரமான அமைப்பு, நிலைகள் இருப்பதெல்லாம் சாஸ்திரப்படி கடுமையான விளைவுகளை உண்டாக்கக் கூடியதுதான்.

ஒரு நாட்டின் வடகிழக்குப் பகுதியில் மலைகள் போன்றவைகள் இல்லாமல் இருப்பது நல்லது. இப்படி இருந்தால் முரண்பாடான வாழ்க்கைகள், போராட்டங்கள், குண்டு வெடிப்புகள் போன்ற நிகழ்வுகள் மாறி மாறி இருக்கத்தான் செய்யும்.

காஷ்மீரைப் பொறுத்தவரை தற்பொழுது இருப்பதை விட பிரச்சனைகள் அதிகமாவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. இதை கட்டுப்படுத்துவதும் கடினம்தான்.

வெப்துனியாவைப் படிக்கவும்