இராமநாத சுவாமி இருந்து வறுமையும், துயரமும் ஏன்?

செவ்வாய், 8 நவம்பர் 2011 (17:23 IST)
FILE
தமிழ்.வெப்துனியா.காம்: இராமநாதபுரத்தில் தொடர்ந்து வறட்சி நிலவி வருவது ஏன்? அம்மாவட்ட மீனவர்களும் தொடர்ந்து - சிங்கள கடற்படையினர் தாக்குதலால் - துயரத்தில் இருந்து வருகின்றனரே? இராமன் வழிபட்ட இராமநாத சுவாமி ஆலயம் அங்கிருந்தும் அந்த மாவட்ட மக்களுக்கு மகிழ்ச்சி இல்லையே ஏன்?

ஜோதிட ரத்னா முனைவர் க.ப.வித்யாதரன்: இராமனால் வழிபட்டதால் இராமநாத சுவாமி. இராமன் என்றாலே கஷ்டமான வாழ்க்கைதானே? எனவே இராமன் வழிபட்ட அந்தத் தலத்திலும் கஷ்டம் நிலவுகிறது. அதுமட்டுமின்றி, ஆதியில் எந்தெந்த இடங்கள் எல்லாம் உலகில் யுத்த களங்களாக இருந்தனவோ அவை யாவும் இன்றளவும் யுத்த களமாகத்தான் இருக்கின்றன. துரியோதனின் ஊர் என்று எதை புராணம் குறிப்பிடுகிறதோ அந்தப் பகுதியெல்லாம் இன்றளவும் யுத்த பூமியாகத்தானே இருக்கின்றன.

அதேபோல் ஈரான், ஈராக் நாடுகள் இருக்கும் டைகிரிஸ், யூப்ரடீஸ் நதிகள் பாயும் பகுதியும் யுத்தக் களமாகத்தானே இருக்கின்றன? நமக்குத் தெரிந்து இராமாயணத்தில் யுத்த களமாக சித்தரிக்கப்பட்ட இலங்கை இன்றளவும் அமையற்று யுத்தக்களமாகத்தானே இருக்கிறது?

இந்த போரால் எழுந்த சோகத்துடன் திரும்பிய இராமன் வழிபட்ட புண்ணியத்தலமாக இருந்ததால் இன்றும் அங்கு சோகம் நிலவுகிறது. அந்தப் பகுதியல் விட்டு விட்டு மழை பெய்வதால் வறட்சி தொடருகிறது. ஆயினும் இது தொடர்ந்து வறட்சியாகவே இருந்துவிடவில்லை என்பதையும் கவனிக்க வேண்டும். ஒரு ஆண்டில் இல்லையென்றாலும், மறு ஆண்டில் மழை பெய்து அந்தப் பகுதி மக்களை இராமநாத சுவாமி வாழ வைத்துக்கொண்டுதானே இருக்கிறார்?

வெப்துனியாவைப் படிக்கவும்