உலக‌ பொருளாதார‌ பி‌ன்னடைவு தொடருமா?

வெள்ளி, 4 நவம்பர் 2011 (19:18 IST)
த‌மி‌ழ்.வெ‌ப்து‌னியா.கா‌ம்: அமெரிகக, ஐரோப்பிய ஒன்றிய நாடுகளை கடன் சுமை கடுமையாக அச்சுறுத்தி வருகிறது. இதனால், உலக அளவில் 2008இல் ஏற்பட்டதைப் போல் மீண்டும் ஒரு பொருளாதாரப் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இது எப்படிப் போகும்?

ஜோ‌திட ர‌த்னா முனைவ‌ர் க.ப.‌வி‌த்யாதர‌ன்: உலபொருளாதார‌ப் ‌பி‌ன்னடைவு இன்னமும் அதிகமாகும். துலாத்திற்கு சனி வருவதால் மேலும் அதிகரிக்கும். நாணயத்திற்கெல்லாம் கொஞ்சம் மதிப்பு குறையும். பண்டமாற்று முறை பழங்காலத்தில் இருந்ததைப் போல் கூட நடப்பதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. தற்போது கோலோச்சி நிற்கின்ற கணினி துறை கூட 2014 மத்தியப் பகுதியில் சரிவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. தொடக்கத்தில் இருந்தே கூட சரிவதற்கான வாய்ப்புகளும் இருக்கிறது.

இனிமேல் மற்றொரு நாட்டுக்காரர்களைப் பயன்படுத்துவது எல்லாம் குறையும். துலாத்திற்கு சனி வருவதால், தன் நாட்டில் உள்ளவர்களையே தகுதி உள்ளவர்களாக ஆக்கி தன் நாட்டுக்காரர்களே அந்தப் பணிகளை செய்வதற்கான முயற்சிகள் ஒவ்வொரு நாடும் மேற்கொள்ளும். இதுபோன்று வரும்போது, ஒரு நாட்டில் இருந்து மற்றொரு நாட்டிற்குச் செல்வதெல்லாம் குறையும். அதனால், அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளின் கடன் சுமைகளும் அதிகரிக்கும். மேலும் அந்த நாடுகளில் புரட்சிகள் வெடிப்பதற்கான வாய்ப்புகளும் உண்டு.

வெப்துனியாவைப் படிக்கவும்