குல தெ‌ய்வ வ‌ழிபா‌ட்டி‌ல் ப‌லி கொடு‌ப்பது அவ‌சியமா?

திங்கள், 6 ஜூன் 2011 (19:16 IST)
த‌மி‌ழ்.வெ‌ப்து‌னியா.கா‌‌ம்: பொதுவாக குல தெய்வத்திற்கு ஆடு, கோழி பலியிட்டுதான் வழிபாடு செய்கிறோம். அப்படிதான் வழிபாடு செய்ய வேண்டுமா? வேறு வழிபாடு ஏதேனும் செய்யலாமா?

ஜோ‌திட ர‌த்னா முனைவ‌ர் க.ப.‌வி‌த்யாதர‌ன்: பொதுவாக குல தெய்வம் என்று பார்த்தாலே அது காவல் தெய்வமாகத்தான் இருக்கிறது. எதுவுமே ஊருக்குள், நகரத்துக்குள் என்று கிடையாது. எல்லாமே ஊரைத் தாண்டி, எல்லையைத் தாண்டி இருக்கிறது. அதனால்தான் காவல் தெய்வங்களை எல்லைத் தெய்வங்கள் என்று சொல்கிறோம். காவல் காப்பவர்கள் என்றாலே அவர்களுடைய உணவு முறைகள் சற்று மாறுபட்டது என்றுதான் நினைக்கிறோம்.

அதுமட்டுமல்லாமல் இந்த காவல் தெய்வங்கள் எல்லாமே கடுமையான ஆயுதங்களை கையில் ஏந்தியவாறுதான் இருக்கின்றன. முனியன், முனீஸ்வரர், அய்யனார் இவர்களையெல்லாம் பார்த்தால், குரூரமான பார்வை, கடுமையான ஆயுதம் ஏந்திய கைகள், காலுக்குக் கீழே ஒருவருடைய தலை போன்றுதான் சித்தரிக்கப்பட்டுள்ளது.

அதனால் பொதுவாக காவல் தெய்வங்கள் என்பது என்ன? அந்தக் காலத்தில் குல தெய்வ வழிபாடு என்பது இப்பொழுது இருப்பதைப் போன்று கிடையாது. சொந்த பந்தங்கள் வகையாறாக்கள், ரத்த பந்தங்கள் எல்லோரையும் அழைத்துச் சென்றுதான் குல தெய்வ வழிபாடு செய்வார்கள். அதில் ஒருவருக்கு உடம்பு முடியாமல் வர முடியவில்லை, அவருக்கு உடல்நிலை சரியான பிறகுதான் அந்த வழிபாட்டையே நடத்துவார்கள்.

அங்காளிகள், பங்காளிகள் என்று இரண்டு உண்டு. அங்காளிகள் என்றால் அங்கத்துடன் ஒட்டிப் பிறந்தவர்கள், அதாவது கூடப் பிறந்தவர்கள். பங்காளிகள் என்றால் சித்தப்பா பிள்ளைகள், பெரியப்பா பிள்ளைகள், ஒன்றுவிட்ட, இரண்டுவிட்ட என்பார்களே அவர்கள். இதுபோல, அங்காளிகளும், பங்காளிகளும் சேர்ந்து வழிபடுவதுதான் குல தெய்வ வழிபாடு. அங்கேயே மூன்று நாட்கள் தங்கி வழிபடுவது, அங்கே நிச்சயதார்த்தம் எல்லாம் பேசி முடிப்பது போன்றெல்லாம் கூட நடைமுறையில் உண்டு.

அந்த நேரத்தில் ஒரு நாள் சைவமாக இருக்கும், மற்றொரு நாள் அசைவமாக இருக்கும், குறிப்பாக முடியும் நாள் சைவமாக இருக்கும். இதை ஒரு பயணமாக எடுத்துக்கொண்டார்கள். எல்லோரும் சேர்ந்து கூடாரம் அமைத்து, அங்கு கிடைக்கும் தண்ணீரில் பொங்கல் வைத்தல், காவு கொடுத்தல் என்று இருந்தது. அந்தக் காலத்தில் ஆன்மீகமாகவும் இருந்தது, களி‌க்கூட்டு, அதாவது களிப்படையக் கூடிய நிகழ்வாகவும் இருந்தது. அதனால் பான வகைகள், மாறுபட்ட உணவு வகைகள் என இறைவன் பெயரால் அனைத்தும் நிகழ்த்தப்பட்டது. அதைத்தான் வழிவழியாக பின்பற்றி வருகிறார்கள்.

ஆனால், இதை மாற்றிச் செய்யக்கூடாதா?

எனக்குத் தெரிந்த நண்பர் ஒருவர் செய்தார். அதன்பிறகு அவருடைய கனவிலேயே வந்து கேட்டு, அதைக் கொடுத்தபிறகுதான் அவருக்கு சில விஷயங்கள் எல்லாம் நிறைவேறியது. அவர் ஒரு விஞ்ஞானி. அசைவ உணவு, ரத்த காவுகளை தவிர்த்து இருந்து வந்தார். அடுத்தடுத்து அவருக்கு விபத்துகள் ஏற்பட்டுக் கொண்டே இருந்தது. அந்த நேரத்தில் அவர் கனவில் வந்து எனக்கு கொடுக்க வேண்டியதை கொடுக்காததால் உன் ரத்தத்தை நான் எடுத்துக் கொண்டிருக்கிறேன் என்று சொல்லியிருக்கிறது. அதன்பிறகு பயந்து போய், அயல்நாட்டில் இருந்து இங்கு பந்து செய்துவிட்டுச் சென்றார்.

வெப்துனியாவைப் படிக்கவும்