பொதுவாகவே கர்ப்ப காலத்தில் பெண்கள் விரதங்களை கடைப்பிடிக்காமல் தவிர்ப்பது நல்லது. அந்த காலகட்டத்தில் இறைவழிபாடு மேற்கொள்வதன் மூலம் பிறக்கும் குழந்தைக்கு சிறப்பு சேர்க்க முடியும் என்றே சங்க கால நூல்களில் கூறப்பட்டுள்ளது.
அதன்படி, ஒரு பெண் கருவுற்ற முதல் மாதத்தில் குலதெய்வ வழிபாடு மேற்கொள்ளலாம். இரண்டாவது மாதத்தில் சூரியன் வழிபாடும், 3வது மாதத்தில் சந்திரன் வழிபாடும், 4வது மாதத்தில் செவ்வாய், 5வது மாதத்தில் புதன், 6வது மாதத்தில் குரு, 7வது மாதத்தில் சுக்கிரன், 8வது மாதத்தில் சனி வழிபாடும் மேற்கொள்ள வேண்டும்.
இதேபோல் ஒன்பதாவது மாதத்தில் மீண்டும் குலதெய்வ வழிபாட்டுடன், இஷ்ட தெய்வ வழிபாட்டையும் செய்யலாம். இதில் சூரியன் என்பது சிவனுடைய அம்சமாக கருதப்படுகிறது. எனவே சிவ வழிபாடு மேற்கொள்ளலாம். அதற்கான ஆன்மிகப் பாடல்கள், மந்திரங்களை ஜபிக்கலாம்.
எனவே, கர்ப்ப காலத்தில் விரதம் இருப்பதைத் தவிர்த்து விட்டு, இறை வழிபாட்டை மேற்கொண்டாலே சிறப்பான எதிர்காலம் உள்ள குழந்தைகளை பெண்களால் பெற முடியும்.