கணினி துறையில் சாதிக்கும் ஜாதக அமைப்பு யாருக்கெல்லாம் உண்டு?

செவ்வாய், 21 ஏப்ரல் 2009 (17:59 IST)
கணினி துறைக்கு உரிய கிரகம் சனி. அந்த வகையில் ஒருவரது ஜாதகத்தில் சனி பகவான் சிறப்பாக இருந்தால் அவர் கணினித் துறையில் சாதிப்பார் என்று கொள்ளலாம்.

அதற்கடுத்தபடியாக சனியின் நட்பு கிரகங்களான சுக்கிரனும், புதனும் வலுவடைந்து இருந்தால் கணினித் துறையில் சிறப்பான முன்னேற்றத்தை பார்க்கலாம். குறிப்பாக 10ஆம் இடம் (உத்யோக ஸ்தானம்); 3வது இடத்தில் (முயற்சி ஸ்தானம்) ஆகியவற்றில் சனி, சுக்கிரன், புதன் இருந்தால் அல்லது 10ஆம் வீட்டிற்கு உரிய கிரகத்துடன் சுக்கிரன், சனி, புதன் நல்ல விதத்தில் தொடர்பு பெற்றிருந்தாலோ அவர்கள் கணினித் துறையில் சாதனை படைப்பர்.

இத்துடன், மின்னணு துறைக்கு உரிய கிரகமான ராகுவும் அவரது ஜாதகத்தில் சுபத்தன்மை பெற்றிருந்தால் கணினித் துறையில் அவர் நம்பர்-1 ஆக விளங்குவார். எத்தனை போட்டிகள், தொழில் ரீதியான எதிரிகள் இருந்தாலும் இவருக்கு என்று தனித்தன்மை இருக்கும்.

வெப்துனியாவைப் படிக்கவும்