இரு‌‌க்கு‌ம் ‌வீ‌ட்டை ‌வி‌ற்று‌வி‌ட்டு பு‌திதாக ‌வீடு வா‌ங்கலாமா?

செவ்வாய், 22 மார்ச் 2011 (18:24 IST)
த‌மி‌ழ்.வெ‌ப்து‌னியா.கா‌ம்: இருக்கும் வீட்டை விற்றுவிட்டு மேலும் கடன் வாங்கி புதிதாக ஒரு வீட்டை வாங்கலாமா? இதானல் இருப்பதும் போய்விடுமோ என்கின்ற அச்சம் வருவது ஏன்? பொதுவான ஆலோசனை.

ஜோ‌‌‌திட ர‌த்னா முனைவ‌ர் க.ப.‌வி‌த்யாதர‌ன்: ஒருவர் திருப்பூரில் இருந்து வந்திருந்தார். அவருடைய ஜாதகப்படி சுக்ர திசை, புதன் புத்தி, மிதுன லக்னம், துலாம் ராசி. துலாம் ராசிக்கு தற்பொழுது ஏழரை சனி நடந்து கொண்டிருக்கிறது. தசா புத்தியும் அவருக்குச் சாதகமாக இருக்கிறது.

அதனால், இருப்பதை புதுப்பிக்க வேண்டிவரும். பூர்வீகச் சொத்தை விற்றுவிட்டு மற்றொன்று வாங்க வேண்டிவரும். வெளியில் இருக்கும் நிலத்தை விற்றுவிட்டு புதிதாக வீடு கட்ட வேண்டிவரும் அல்லது பிளாட்டில் குடியேற வேண்டிவரும் என்று சொன்னேன்.

இது, நல்ல தசா புத்தி இருக்கும் போதும், பொங்குச் சனி சொல்வார்களே, இரண்டாவது சுற்று சனி நடக்கும் போதும் இதுபோன்ற ஆக்கப்பூர்வமானப் பணிகளில் இறங்கலாம். ரிஸ்க்கான வேலைகளில் இறங்கலாம். இருப்பதை விற்றுவிட்டு வேறு ஒன்று வாங்குவது போன்று. ஆனால் சிக்கலான நேரம் வரும்போதுதான் அந்த எண்ணத்தைக் கொடுக்கும்.

சிலரை எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு ரோட்டுக்கு வந்துவிட்டார் என்று சொல்வார்களே அந்த மாதிரியான நேரத்தில் மிகவும் உஷாராக இருக்க வேண்டும். அப்பொழுது ஜோதிடரை கலந்தாலோசித்துவிட்டு அந்த நேரத்தில் புது முயற்சிகளை மேற்கொள்வது நல்லது. இல்லையென்றால் உள்ளது போச்சுடா என்று சொல்வார்களே அதுபோன்று ஆகிவிடும்.

வெப்துனியாவைப் படிக்கவும்