ஆனைமுகன், துர்க்கை, தந்தை சிவன், பெருமாள் ஆகியோருடன் காலை மடித்து அமர்ந்த நிலையில் காட்சி தருகிறான். மெய்சிலிர்க்க காட்சி தரும் இறைவன் சோதிடக் கலைக்கு முதல் நூல் இயற்றியவன். அதன் அங்கமான வாஸ்து கலைக்கு இங்கு உயிரோட்டம் கொடுக்கிறான்.
வானுயர்ந்த வடக்கு நோக்கிய ஆலயத்துக்கு தெற்கில் நெடிதூயர்ந்த குன்று, வடக்கில் இருந்து வரும் ஈசானிய தெருத்தாக்கம் ஆலயத்துள், இறைவன் சன்னதிக்கு ஈசானியத்தில் குளம். எனவே வழிபடும் மக்கள் கூட்டம் அதிகம். வாஸ்து பலம் குறைந்த வீடுகளில் வாழும் மக்கள் இங்கு வந்து வழிபடுவது வீட்டின் வாஸ்து குறைப்பாட்டை நீக்கும்.