திருவுழிச்சித்தர் ‌சிற‌ப்பு

புதன், 18 ஜனவரி 2012 (16:08 IST)
WD

மதுரைக்கு வடக்கே யானைமலையின் வால்பகுதியில் ஏறிச் சென்றால் திருவுழிச்சித்தர் தீர்த்தம் உள்ளது. தீர்த்தத்தில் மஞ்சள் நீராடினால் குழந்தைச் செல்வம் கிட்டும், திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நடக்கும்.

பிள்ளை லோகேஷ்வரர்!

WD
திருவுழிச்சித்தர் தீர்த்தத்திற்கு கிழக்கே அடிவாரத்தில் கொடிக்குளம் என்ற ஜோதிஷபுரி உள்ளது. முஸ்லீம்களின் படையெடுப்பில் இருந்து திரு அரங்கம் பெருமாளை காப்பாற்றி எடுத்து வந்து குகையில் வைத்து பாதுகாத்தவர் பிள்ளை லோகேஷ்வரர். படையெடுப்பு முடிந்தபின் பெருமாளை எடுத்துச் செல்ல, மலையில் இருந்து இறங்கும் போது லோகேஷ்வரர் கீழே விழ பெருமாளை தனது மடியில் வைத்து அடிபடாமல் காத்தார்.

லோகேஷ்வரர் மூலம் மறைந்த வேதங்கள் வெளியாகின. இவரது சமாதி இங்கு உள்ளது. அதன் மேல் ஜோதி மரம் உள்ளது. மரத்திற்கு முன் லோகேஷ்வரர் உள்ளார். இவரை வலம் வர செல்வ செழிப்பும், ஆடம்பரமான வாழ்வும் கிட்டும். கணவன்-மனைவி உறவில் நெருக்கம் ஏற்படும். புத்திர பாக்கியம் கூடும். தொழில் விருத்தி ஏற்படும். சுக்கிர பலம் கூடும். சமாதியை வணங்கி வளம் பெறுங்கள்.

WD

இங்கு விஷ முறிவு விநாயகர் கோவில் உள்ளது. இங்குள்ள கிணற்றில் குளித்து அருகில் உள்ள சிவனை தரிசித்தபின், வலப்புறமுள்ள கருப்பணசாமிக்கு உக்கிரம் அதிகம் உள்ளதால் கிரீடம் மட்டும் தெரிகின்றது. வணங்கிய பின் விநாயகரிடம் வந்து நாமே பூஜை செய்யலாம்.

விஷக்கடி விஷங்கள் போகவும், மனிதர்களின் எண்ணத்தால் ஏற்படும் விஷத்திலிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ளவும் நவக்கிரகங்களால் ஏற்படும் துன்பம் என்னும் விஷமும், செய்வினை வைப்பு, வறுமை, கடன் போன்ற விஷங்களும், எல்லாவிதமான முன்னேற்றங்களில் ஏற்படு‌ம் தடைகளும் இவரை வணங்கினால் நீங்கி காரிய சித்தியாகும். சித்தியானவுடன் திருமஞ்சனம் செய்யுங்கள்.

வெப்துனியாவைப் படிக்கவும்