விதவிதமான புத்தாடைகள்

திங்கள், 12 அக்டோபர் 2009 (17:00 IST)
பொதுவாக ஒவ்வொரு தீபாவளிக்கும் விதவிதமான ஆடைகளை விற்பனைக்கு அறிமுகப்படுத்துவார்கள் ஜவுளி வியாபாரிகள்.

ஆனால் எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு ஒவ்வொரு ஜவுளிக் கடைகளும், விதவிதமான ஆடைகளையும், புடவைகளையும் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளன.

webdunia photo
WD
பட்டுக்குப் பெயர்போன நல்லியில், மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட பைரவி பட்டுப் புடவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இன்றைய மங்கைகள் விரும்பும் டிசைன்களில் இவை வெளிவந்துள்ளது கூடுதல் சிறப்பு.

அதேப்போல ஆர்எம்கேவியின் நேச்சுரல்ஸ் புடவைகள் என்று வெளி வந்துள்ளவை, இயற்கையில் கொட்டிக் கிடக்கும் அனைத்து வர்ணங்களிலும், மிக நுணுக்கமான டிசைன்களைக் கொண்டுள்ளன இவைகள். இப்படியும் ஒரு பட்டுப்புடவையா என்று வியக்க வைக்கும் வகையில் வந்துள்ளது நேச்சுரல்ஸ் புடவைகள்.

போத்தீஸின் வஸ்தர கலா பட்டு - பொதுவாக வட மாநிலப் பெண்கள் விரும்புவது கைவேலைப்பாட்டுடன் கூடி புடவைகள்தான். ஆனால் தென்னிந்திய பெண்கள் பெரும்பாலும் பட்டுப் புடவைகளைத்தான் விரும்பி வாங்கி அணிகிறார்கள்.

webdunia photo
WD
இவர்கள் இருவரது விருப்பத்தையும் ஒரேப் புடவை நிறைவேற்றும் என்றால் அதற்கு மவுசு கொஞ்சம் அதிகம்தானே. அந்த வகையில் வெளிவந்திருப்பதுதான் வஸ்தர கலா பட்டுப் புடவையாகும்.


அதோடு அல்லாமல் சிறுவர், சிறுமியர்களுக்கும் விதவிதமான ஆடைகளும் விற்பனையில் உள்ளன.

தற்போது அதிக கை வேலைப்பாடு கொண்ட ·பிராக் மாடல்களும், அனார்க்களி சுடிதார்களையும்தான் சிறுமிகள் விரும்பி வாங்குகிறார்கள்.

அதேப்போல, சிறுவர்களுக்கு கோர்ட் மாடல்களில் பல விதங்களும், அதிகமான எண்ணிக்கை கொண்ட பாக்கெட்டுகள் வைத்த பேண்டுகளும் அதிகமாக விற்பனையாகின்றனவாம்.

சுடிதார்களில் வலைகளின் மூலம் முழுக் கை அமைந்த மசக்கலி, வேலைப்பாடுகளுடன் கூடிய காமினி போன்றவை புது வரவுகளின் பட்டியலில் உள்ளன.

பெரும்பாலான பெண்கள் வேலைப்பாடு கொண்ட சுடிதார்களையே அதிகமாக விரும்பி வாங்கியுள்ளனர் இந்த தீபாவளிக்கு.

இவ்வளவு சொல்லிவிட்டு, ஆண்களுக்கு எதுவும் சொல்லாமல் விட்டுவிட்டால் சரியாக இருக்காது அல்லவா?

ஆண்கள் இந்த முறை அதிகம் பேர் விரும்பி வாங்கியது நீளக் கோடுகள் நிறைந்த ஷர்ட்டுகள்தான். இவற்றில், கை, காலர், பட்டன் பகுதிகளில் வேறு நிறங்கள் கொண்டவையும் அதிகம் விற்பனையாகியுள்ளன.

மேலும், இரண்டு நிறங்களின் ஷேட் கொண்ட ஷர்ட்டுகளும் அதிகம் விற்பனையில் உள்ளன.

காட்டன் ஜீன்ஸ்களும், ‌வித‌விதமான பா‌க்கெ‌ட்டுக‌ள் வை‌த்தவை, கை‌க் கடிகார‌ம் இணை‌ந்தவை போ‌ன்ற புதுவகையான பேன்ட்களும் ஆண்களால் அதிகம் விரும்பப்படுகிறது.

என்ன இவ்வளவையும் சொல்லியாச்சு.. இன்னும் நீங்க புதுத்துணி வாங்கலையா... சீக்கிரம் போங்க.. கூட்டமா இருக்கிற கடையில போய் மாட்டிக்காம, நல்லத் தரமான கடையில துணி எடுத்து மகிழ்ச்சியா இந்த தீபாவளியக் கொண்டாடுங்க.

வார நாட்களில் கூட்டம் குறைவாக இருக்கும் போதே புத்தாடைகளை வாங்குவதுதான் புத்திசாலித்தனம்.

நீங்க என்ன சொல்றீங்க?

வெப்துனியாவைப் படிக்கவும்