தமிழகப் பண்பாட்டுக் காட்சியகம்

வெள்ளி, 18 செப்டம்பர் 2009 (16:45 IST)
தமிழர்களின் பிரச்சனைகளை முன்னிலைப்படுத்தி, அதற்கானத் தீர்வை அளிக்கக் கூடிய பலமற்றவனாய் தமிழன் வாழ்வதை விளக்கும் தமிழகப் பண்பாட்டுக் காட்சியகம் (3ஆம் ஆண்டு) நாளை நடைபெறுகிறது.

தமிழகப் பெண்கள் செயற்களம் சார்பில் சென்னை மயிலாப்பூர் திருவள்ளுவர் சிலை அருகே ஏற்பாடு செய்யப்பட்டுள்ள காட்சியகத்தை நாளை மாலை 5 மணிக்கு துவக்கி வைத்து சிறப்புரையாற்றுகிறார் தமிழர் கழகம் தலைவர் இரா. புதுக்கோட்டை பாவாணன்.

இந்நிகழ்ச்சியில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுச் செயலர் பெ. மணியரசன், திரைப்பட இயக்குனர் தங்கர்பச்சான், திரைப்படப் பாடலாசிரியர் கவிஞர் தாமரை ஆகியோரும் உரையாற்றுகின்றனர்.

ஈழத்தில் ஒரு இலட்சம் தமிழர்கள் கொடூரமாகக் கொல்லப்பட்டபோது அதைத் தடுக்க முடியாத நிலை, சிங்கள இன வெறி அரசிற்கு துணை நின்று தமிழர்களைக் கொன்று குவித்த இந்திய அரசை தண்டிக்க முடியாமல், 800 தமிழக மீனவர்கள் சிங்கள கடற்படையினரால் கொல்லப்பட்டதை தடுக்க முடியாமல் தமிழ்நாட்டுத் தமிழன் வாழ்ந்துவரும் நிலையை மாற்ற தமிழக மக்களாய் ஒருங்கிணைவோம் தமிழர் பண்பாட்டை மீட்டெடுப்போம் என்ற முழக்கத்துடன் இக்காட்சியகம் நடைபெறுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்