'கருப்புதான் எனக்கு பிடிச்ச கலரு'

வியாழன், 29 மார்ச் 2012 (16:19 IST)
FILE
மாறி வரும் ஃபேஷன் உலகில் மாறாமல் இருப்பது கருப்பு தான் ! புகழ்பெற்ற ஃபேஷன் டிஸைனர்களாலும், மாடல்களாலும், அதிகம் விரும்பப்படுவதும் இந்த நிறம் தான் !

அடிப்படை நிறமான கருப்பின் அழகே தனி. அனைவருக்கும் பொருந்தும் இந்த நிறம். எந்த வயதானாலும் கருப்பு அணிய யாரும் தயங்குவதில்லை. “சிவப்பு நிற ஸ்கர்ட்டோடு பச்சை நிற டாப்ஸ் நன்றாக இருக்குமா?” என்று அதிகம் யோசிக்க தேவையில்லை. கருப்போடு சேறாத நிறமே இல்லை.

கருப்பின் தன்மை :

கருப்பு நிற உடை, அணிபவரை மெலிந்தவராக தோன்றச் செய்யும்.

எங்கு எந்த நிறத்தை உடுத்த வேண்டும் என்று குழம்புபவர்களுக்கு கருப்பு சிறந்த நிறம். கல்யாணம் போன்ற விசேஷங்களுக்கு கருப்பு நிறம் அணியக் கூடாது என்ற காலம் போய் விட்டது. கருப்பு நிறத்தில காஞ்சிபுரப் பட்டும் கிடைக்கின்றது.

மிக்ஸ்-அண்ட்- மேட்ச் காலமான இக்காலத்தில் கருப்போடு எந்த நிறத்தையும் அணியலாம்.

கருப்பு நகைகள் :

ஆக்ஸிடைஸ்ட் நகைகள் எந்த விதமான உடையோடும் அழகாகத் தோன்றும். தங்க நகைகள் போல் இல்லாமல் இவற்றை மார்டன் உடைகளோடும்; அதிக அளவிலும் அணியலாம்.

கருப்பு உடைகள் :

ஜீன்ஸ், ஸ்கர்ட், பாப்ஸ் டீ ஷர்ட் போன்றவை கருப்பு நிறத்தில் இருந்தால் அவற்றை மற்ற நிற உடைகளோடு அணியலாம். கருப்பு ஜீன்ஸை மஞ்சள் டாப்ஸோடும், கருப்பு
டாப்ஸை சிகப்பு ஸ்கர்ட்டோடும் மாற்றி அணியலாம்.

கருப்பு நிற ஹாண்ட் பேக், காலணிகள் :

கருப்பு நிற ஹாண்ட் பேக் மிகவும் முக்கியமானதாகும். இதை காலையிலும் மாலையிலும் பயன்படுத்தலாம்.

பொதுவாக அனைவரும் கருப்பு நிறத்தில செருப்பு வாங்கினாலும், அழகான கருப்பு நிற செருப்பு போல் வேறு எதுவுமே இல்லை.

கருப்பு நிற மேக்கப் :

தற்பொழுது கருப்பு நிறத்தில் லிப்ஸ்-ஸ்டிக், நெயில் பாலிஷ் ஆகியவையும் கிடைக்கின்றன. இது ஒரு வித்தியாசமான தோற்றத்தை அளிக்கிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்