புதிய கவர்னர் நியமனம் ஏன்?

வியாழன், 5 அக்டோபர் 2017 (06:02 IST)
கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக தமிழகத்திற்கு என கவர்னர் நியமனம் செய்யப்படாமல் மகாராஷ்டிரா கவர்னர் வித்யாசாகர் ராவ் பொறுப்பு கவர்னராக பதவி வகித்த நிலையில் கடந்த வாரம் திடீரென தமிழக கவர்னர் குறித்த அறிவிப்பு வெளிவந்தது அனைவருக்கும் ஆச்சரியத்தை அளித்தது.



 
 
பன்வாரிலால் தமிழகத்தின் புதிய கவர்னராக அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் இன்று சென்னைக்கு வருகை தந்து நாளை பதவியேற்கவுள்ளார். இந்த நிலையில் வித்யாசாகர் ராவ் மாற்றம் ஏன் என்று அரசியல் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.
 
தினகரன் மற்றும் சசிகலா குடும்பத்தினர்களுடன் வித்யாசாகர் ராவ் நெருக்கமாகி அவரது அணிக்கு ஆதரவாக செயல்பட்டதாக அவர் மீது முதல்வரே நேரடி குற்றச்சாட்டு கூறியதாகவும், இதன் காரணமாகவே தமிழகத்திற்கு கவர்னர் நியமனம் செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
 
மேலும் புதிய கவர்னருக்கு  இன்னும் சில நாட்களுக்கு அரசியல்ரீதியான பிரச்சனை இருக்காது என்றே கருதப்படுகிறது.  தினகரன் அணி 18 எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்கம் பற்றிய வழக்கில் தீர்ப்பு யாருக்குச் சாதகமாக இருந்தாலும், மற்றொரு தரப்பு உச்ச நீதிமன்றம் செல்லும் என்பதால் உச்ச நீதிமன்ற தீர்ப்பு வரும்வரை, புதிய கவர்னருக்குப் பெரிதாக எந்த வேலையும் இருக்காது என்று அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்