விஜயகாந்த் மனதை மாற்றிய தொண்டர்கள்

திங்கள், 6 ஜூன் 2016 (14:00 IST)
சட்டசபை தேர்தலில் மக்கள் நலக்கூட்டணியுடன் இணைந்து தேமுதிக போட்டியிட்டது. போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் டெபாசிட் இழந்து தோல்வி அடைந்தது. அதுமட்டுமின்றி அக்க்கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் விஜயகாந்தும் டெபாசிட் இழந்து தோல்வி அடைந்தார். இதையடுத்து தோல்வி குறித்து ஆராய தேமுதிக முக்கிய நிர்வாகிகளுடன் விஜயகாந்த் ஆலோசனை நடத்தினார். கூட்டணியில் கலந்துகொண்ட பலரும் தோல்விக்கு மக்கள் நலகூட்டணியுடன் இணைந்ததே என்று கூறினர்.



இது தொடர்பாக தேமுதிக முக்கிய பிரமுகர் கூறியபோது, சட்டசபை தேர்தலில் தோல்வியை தழுவியதற்கு மக்கள் நலக் கூட்டணியில் இணைந்ததுதான் காரணம் என்று பலரும் கூறினர். எனவே நிர்வாகிகளையும், தொண்டர்களையும் திருப்தி செய்யும் வகையில் மக்கள் நலக் கூட்டணியில் இருந்து விலகுவதற்கான அறிவிப்பை விரைவில் விஜயகாந்த் வெளியிட வாய்ப்புள்ளது என்றார்.

விஜயகாந்தின் எண்ணங்களை அறிந்த வைகோ , விஜய்காந்த்,வாசன் கூட்டணியை விட்டு போனால் கவலையில்லை என்றும், அவர்களை இனி எந்த கட்சியினரும் சேர்க்கமாட்டார்கள் என்றும் கூறியதாக செய்திகள் வெளியாகின. அந்த செய்திகளுக்கு வைகோ மறுப்பு தெரிவிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்