இதற்கிடையில், பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட சசிகலா, சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்திற்கு சென்றார். அங்கு, அவரை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள், அதிமுக எம்எல்ஏக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டோர் வரவேற்றனர்.
பின்னர் சசிகலா, ஜெயலலிதா சமாதியில் பொதுக்குழு தீர்மான புத்தகத்தை வைத்து, அஞ்சலி செலுத்தினார். அதனைத் தொடர்ந்து எம்.ஜி.ஆர். நினைவிடத்திலும், அண்ணா நினைவிடத்திலும் அஞ்சலி செலுத்தினார்.
இந்நிலையில், இன்று வரும் 31ஆம் தேதி [சனிக்கிழமை] சசிகலா பொதுச் செயலாளராக பதவி ஏற்பார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலத்தில் பதவி ஏற்கிறார். விழாவில் பங்கேற்பதற்காக அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் முறைப்படி அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.