சசிகலா புஷ்பாவை கைது செய்ய தடை: உச்ச நீதிமன்றம்

திங்கள், 26 செப்டம்பர் 2016 (16:14 IST)
சசிகலா புஷ்பாவை கைது செய்யக்கூடாது என்றும், அவருக்கு தமிழக காவல்துறையினர் முழு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


 

 
சசிகலா புஷ்பா, அவரது கணவர் மற்றும் மகன் ஆகியோர் மீது பாலியல் புகார் செய்யப்பட்டதை அடுத்து மதுரை உயர் நீதிமன்ற கிளையில் முன்ஜாமின் தாக்கல் செய்தனர். 
 
முன்ஜாமின் மனுவில் கையெழுத்து மோசடியால் முன்ஜாமின் மனுவை தள்ளுபடி செய்ததோடு சசிகலா புஷ்பா மீது வழக்கு பதிவு செய்ய மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவிட்டது.
 
இந்நிலையில் முன்ஜாமின் கோரி மூவரும் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். முன்ஜாமின் குறித்த மனு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், சசிகலா புஷ்பா உள்பட் மூன்று பேரையும் கைது செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.
 
அக்டோபர் 3ஆம் தேதி புதுக்கோட்டை நீதிமன்றத்திலும், அக்டோபர் 7ஆம் தேதி மதுரை நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும். காவல்துறை மற்றும் நீதிமன்ற விசாரணைக்கு சசிகலா புஷ்பா முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
 
மேலும் சசிகலா புஷ்பாவுக்கு தமிழக காவல்துறை முழு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.      

வெப்துனியாவைப் படிக்கவும்