திடீர் திருப்பம்; நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தால் ஓ.பி.எஸ்-ற்கு ஆதரவு - திமுக அறிவிப்பு

வியாழன், 9 பிப்ரவரி 2017 (18:52 IST)
தமிழக அரசியலில் திடீர் திருப்பமாக, தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்திற்கு ஆதரவு அளிக்கப்படும் என திமுக அறிவித்துள்ளது.


 

 
தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்திற்கும், அதிமுக தற்காலிக பொதுச்செயலாளர் சசிகலாவிற்கும் எழுந்துள்ள மோதல் காரணமாக, தமிழக அரசியல் பரபரப்பின் உச்சகட்டத்தை எட்டியுள்ளது.
 
இந்நிலையில்,  நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தால் ஓ.பி.எஸ் ஓ.பி.எஸ்-ற்கு ஆதரவு கொடுக்கப்படும் என திமுக அறிவித்துள்ளது. 
 
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய திமுக துணைப் பொதுச்செயலாளர் சுப்புலட்சுமி ஜகதீசன் “ஏற்கனவே திமுக துணை பொருளாலர் துரை முருகன் சட்டசபையிலேயே, ஓ.பி.எஸ்-யிடம், உங்களுக்கு எப்போதுன் எங்கள் ஆதரவு உண்டு.. நீங்கள் உங்கள் பக்கம் பார்த்துக் கொள்ளுங்கள் எனக் கூறியிருந்தார். அது போலவே திமுக தற்போது ஓ.பி.எஸ்-ற்கு ஆதரவு அளித்துள்ளது. இது ஓ.பி.எஸ் என்ற தனிப்பட்ட மனிதருக்கு தரும் ஆதரவு இல்லை. ஒரு மாநிலத்தின் முதல்வருக்கு தரும் ஆதரவாக இதைக் கருத வேண்டும்” என அவர் கூறியுள்ளார்.
 
இதுவரை தமிழக அரசியல் வரலாற்றில் திமுகவும், அதிமுகவும் எலியும், பூனையுமாக செயல்பட்டு வந்ததைத்தான் மக்கள் பார்த்துள்ளார்கள்.  
 
தற்போது முதல் முறையாக அதிமுகவை சேர்ந்த ஓ.பி.எஸ்-ற்கு திமுக தன்னுடைய ஆதரவை அளிக்க முன் வந்திருப்பது அரசியல் சரித்திரத்தில் இடம் பெறும் என்றால் அது மிகை இல்லை...

வெப்துனியாவைப் படிக்கவும்