எடப்பாடி இதை செய்யாவிட்டால் ஆட்சி திமுகவுக்கு போய்விடும். சுப்பிரமணியம் சுவாமி

புதன், 6 செப்டம்பர் 2017 (05:16 IST)
நேற்று எடப்பாடி தலைமையிலான அணியின் எம்.எல்.ஏக்கள் கூடியபோது அதில் 109 எம்.எல்.ஏக்கள் மட்டும் கலந்து கொண்டதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இது மெஜாரிட்டிக்கான எண்ணிக்கை இல்லை என்பதால் அவர் நம்பிக்க்கை இழந்துவிட்டதாகவே கருதப்படுகிறது.



 


ஆனால் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவு தருவதாக தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 9 பேர் போனில் தெரிவித்ததாக அமைச்சர் ஜெயகுமார் கூறினார். மேலும் கருணாஸ் உள்ளிட்ட 3 எம்.எல்.ஏக்களும் தங்களுக்கே ஆதரவு தருவதாக உறுதியளித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
 
இந்த நிலையில் மெஜாரிட்டி இழந்துவிட்ட எடப்பாடி அணியினர் உடனடியாக சசிகலாவை சந்தித்து புதிய முதல்வரை தேர்வு செய்தால் மட்டுமே ஆட்சி தப்பிக்கும் என்றும், இல்லையெனில் தினகரன் - திமுக கூட்டணியில் புதிய ஆட்சி வந்துவிடும் என்றும் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார்.
 
ஆனால் திமுக தரப்பினர் கூறியபோது தாங்கள் கொல்லைப்புற ஆட்சியை விரும்பவில்லை என்றும், இப்போது தேர்தல் வந்தாலும் அதில் வெற்றி ஆட்சியை பிடிக்கக்கூடிய திறன் தங்களுக்கு இருப்பதாகவும் தெரிவித்தனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்