நடராஜன், தம்பிதுரை ஆகியோர் அதிமுக கட்சியை அழிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அவர்களை கழகத்தின் பொதுச்செயலாளர் சசிகலா கண்டிக்க வேண்டும் என அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி கருத்து தெரிவித்துள்ளார்.
சசிகலா குடும்பத்தினருக்கு எதிராக கே.பி.முனுசாமி பல கருத்துகளை கூறி வருகிறார். சமீபத்தில் தஞ்சையில் நடந்த பொங்கல் விழாவில் பேசிய நடராஜன், முனுசாமிக்கு எதிராக பல கருத்துகளை கூறியிருந்தார். அதாவது, அதிமுக கட்சியை காப்பாற்றியதில் தங்களுக்கு பெரும் பங்கு உள்ளது என சசிகலாவின் தம்பி திவாகரன் கூறினார். மேலும், அதிமுக எங்கள் கட்சி. நாங்கள் குடும்ப அரசியல் செய்வோம் என நடராஜனும் பேசினார்.
கட்சி ஒன்றும் நடராஜனின் பாட்டன் சேர்த்த சொத்து அல்ல. ஒன்றரை கோடி தொண்டர்களின் சொத்து அது. நான் ஒரு நக்சலைட் என நடராஜன் பேசியிருக்கிறார். இது அபாண்டமான குற்றச்சாட்டு. அதேபோல், நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை, முதல் அமைச்சரை மீறி செயல்பட்டு வருகிறார்.