அப்பல்லோவில் கருணாநிதி துணைவியாருடன் சந்திப்பு: கணக்கு போட்ட சசிகலா

சனி, 15 அக்டோபர் 2016 (15:10 IST)
ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதை தொடர்ந்து அரசியில் நாகரிகம் கருதி பல அரசியல் தலைவர்கள் அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்று ஜெயலலிதாவின் உடல்நலம் குறித்து விசாரித்து செல்கின்றனர்.


 

 
தமிழக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் வருகையை தொடர்ந்து கனிமொழி மற்றும் நேற்று இரவு 9.30 மணியளவில் திமுக தலைவர் கருணாநிதியின் துணைவியார் ராஜாத்தி அம்மாள் முதல்வரின் உடல்நிலை குறித்து விசாரிக்க அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்றார்.
 
முதல்வரின் உடல் நிலை மற்றும் அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து சுமார் 45 நிமிடம் சசிகலாவை சந்தித்து விவாதித்ததாக கூறப்படுகிறது. இவர்களின் இந்த சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.
 
சசிகலா புஷ்பா, ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து சசிகலா மீது குற்றம் சுமத்தி வருகிறார். இதனால் சசிகலா புஷ்பா மூலம் மத்திய அரசு தனக்கு நெருக்கடி கொடுக்கும் என நினைக்கிறார் சசிகலா. 
 
கனிமொழி ஏற்கனவே ராஜ்யசபாவில் சசிகலா புஷ்பாவுக்கு ஆதரவு அளித்து வருகிறார். அதோடு சசிகலா புஷ்பா நாடார் சமூகத்தை சேர்ந்தவர். இதனால் ராஜாத்தி அம்மாள் மூலம் கனிமொழியை கொண்டு எப்படியும் சசிகலா புஷ்பாவை அமைதிப்படுத்தி விடலாம் என்பது குறித்து தான் இந்த 45 நிமிட சந்திப்பு என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றனர். 

வெப்துனியாவைப் படிக்கவும்