எலந்தம்பட்டு, காமாட்சிப்பேட்டை, திருவாமூர், செம்மேடு, மேலிருப்பு, கீழிருப்பு என முப்பதுக்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு வாழ்வாதாரமாக விளங்கிய கெடிலம் ஆற்றுக்குள் சட்டவிரோதமாக மினி குவாரி அமைத்து அதன் மூலம் ரூ.100 கோடி ரூபாய் மதிப்புள்ள மணலை திருடியுள்ள சிவமணி இந்த பணத்தில் 'திட்டமிட்டபடி' என்ற படத்தை தயாரித்து அதில் நடித்து வருகிறார்
இந்த நிலையில் நேற்று போலீசாரிடம் சிவமணி கொடுத்த வாக்குமூலத்தில் கூறியதாவது: 'இன்னும் பத்து நாள்கள் என்னை விட்டுவிடுங்கள். என் படத்தை நான் முடித்துவிடுவேன். நான் சம்பாதித்த பணத்தை எல்லாம் அதில்தான் போட்டுள்ளேன். என்னை கைது செய்தால் எல்லாமே முடங்கிவிடும். சட்டத்துக்கு புறம்பாக மணல் அள்ளினேன் என்பது உண்மைதான். ஆனால், நான் மட்டுமே இதை செய்யவில்லை. எனக்கு முன்னர் லட்சுமி, ரவி, மகாலிங்கம் என்று நிறைய பேர் அள்ளிட்டு இருந்தாங்க. அவங்க போட்ட பாதையில்தான் நான் ஆற்றுக்குள் போனேன். மணல் கொள்ளையில் சம்பாதித்த கோடிக்கணக்கான பணத்தில் வருவாய் துறையினர், உள்ளூர் பத்திரிகையாளர்கள், காவல்துறையினர் என பலருக்கும் பல லட்சம் பங்கு அளித்துள்ளேன். இதில் உங்கள் உயர் அதிகாரிகளும் அடக்கம்', என்று கூறி அதிர்ச்சி அடைய செய்துள்ளார்.