பொருளாதார ரீதியில் எதிர்கட்சிகளை தாக்குவதே மோடியின் நோக்கம்: சமாஜ்வாதி சராமாரியாக குற்றச்சாட்டு!!

திங்கள், 28 நவம்பர் 2016 (12:11 IST)
லக்னோவில் பேசிய ஆளும் சமாஜ்வாதி கட்சியின் தேசிய துணைத் தலைவர் கிரண்மே நந்தா மோடியின் திட்டத்தின் மீது சராமாரியாக குற்றம் சாட்டியுள்ளார்.


 
 
உத்தரப் பிரதேச சட்டப்பேரவைக்கு தேர்தல் நடக்கவுள்ளதால் பொருளாதார ரீதியில் எதிர்க்கட்சிகளை தாக்க வேண்டும் என்பதற்காக பண மதிப்பு நீக்கும் நடவடிக்கையை பிரதமர் நரேந்திர மோடி மேற்கொண்டுள்ளார் என குற்றம்சாட்டியுள்ளார்.
 
மேலும் அவர், ரூபாய் நோட்டுகள் தடையால் அதிக சிரமங்களைச் சந்தித்து வரும் பொதுமக்கள் பாஜகவை ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள். சட்டப்பேரவைத் தேர்தலில் இதற்கு தண்டனை வழங்குவார்கள்.
 
இது கட்சி தற்கொலை செய்து கொள்வது போன்ற நடவடிக்கை என்பதை பாஜக அறியவில்லை. சொந்தப் பணம் எடுப்பதற்காக வங்கிகள் முன் நீண்ட வரிசையில் காத்திருக்கும் பொதுமக்கள் வரும் தேர்தலில் பாஜகவுக்கு எதிராக வாக்களித்து, எதிர்ப்பை தெரிவிப்பார்கள் என கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்