எதிர்க்கட்சியினர் என்னை மதிப்பதில்லை, ஒருமையில் பேசுகிறார்கள்: சபாநாயகர் தனபால் குமறல்

வெள்ளி, 29 ஜூலை 2016 (15:19 IST)
திமுகவினர் என்னை மதிப்பதில்லை, ஒருமையில் பேசுகிறார்கள் என்று சபாநாயகர் தனபால் குற்றம் சாட்டியுள்ளார்.


 

 
இன்று காலை சட்டசபையில், நேற்று ஓ.எஸ்.மணியன் சில பிரச்சனை குறித்து பேசியதை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் வலியுறுத்தினார். சபாநாயகர் என்னை யாரும் கட்டாயப்படுத்த வேண்டும் என்று பதில் அளித்தார்.
 
அதற்கு அவையில் இருந்து திமுகவினர் வெளிநடப்பு செய்தனர். மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களிடம் சபாநாயகர் ஜனநாயகத்திற்கு எதிராக செயல்படுகிறார் என்று குற்றம் சாட்டினார்.
 
திமுகவினர் வெளிநடப்பை தொடர்ந்து பேசிய சபாநாயகர் தனபால், பேரவை அமைதியாக நடைபெறுவதை எதிர்க்கட்சியினர் விரும்பவில்லை. அமைச்சர்களை திமுகவினர் அவதூறாக பேசுகின்றனர். என்னை ஒருமையில் பேசுகின்றனர், என்று கூறியுள்ளார்.
 
சபாநாயகர் தனபால் இவ்வாறு கூறியது அனைத்தும் முதல்வர் ஜெயலலிதாவிடம் குறை சொல்லியது போல் இருந்தது. 
 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்   

வெப்துனியாவைப் படிக்கவும்