திமுக தாரை வார்த்த கச்சத்தீவை மீட்போம்: சட்டசபையில் அமைச்சர் சூளுரை

புதன், 12 ஜூலை 2017 (06:54 IST)
கடந்த 1974ஆம் ஆண்டு திமுக தலைவர் மு.கருணாநிதி முதல்வராக இருந்தபோது இந்தியாவுக்கு சொந்தமான கச்சத்தீவை இலங்கைக்கு மத்திய அரசு தாரை வார்த்தது. இதற்கு தமிழக முதல்வராக இருந்த மு.கருணாநிதி எந்தவித எதிர்ப்பையும் பதிவு செய்யவில்லை என்று கூறப்படுகிறது.



 
 
இந்த நிலையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ ராமசாமி சட்டமன்றத்தில் பேசியபோது ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது பலமுறை கச்சத்தீவை மீட்போம் என்று சூளுரைத்தார். ஆனால், மீட்கவில்லை என்று கூறினார்.
 
இதற்கு பதிலளித்த நிதியமைச்சர் ஜெயகுமார், மீனவர்கள் பிரச்னைக்கு காரணம், 1974ல், கச்சத்தீவை தாரை வார்த்தது. அதை, மீண்டும் தமிழகத்துடன் இணைக்க வேண்டும் என ஜெ., வலியுறுத்தினார். நம் மீனவர்கள், தங்களின் பாரம்பரிய மீன்பிடி பகுதியில், மீன் பிடிக்கக் கூடாது என, இலங்கை கூறுவதை ஏற்க முடியாது.  ''கச்சத்தீவை மீட்டே தீருவேன்' என, ஜெயலலிதா கூறினார். அவர் வழியில் நடக்கும் இந்த அரசு, கச்சத்தீவை கண்டிப்பாக மீட்கும் என்று கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்