அண்ணா எம்.ஜி.ஆர் அம்மா திராவிட முன்னேற்றக் கழகம் - புதிய கட்சி தொடங்கிய எம்.ஜி.ஆரின் மகன்

திங்கள், 13 மார்ச் 2017 (15:23 IST)
நடிகரும் மறைந்த தமிழக முன்னாள் முதல்வருமான எம்.ஜி.ஆரின் அண்ணன் சக்கரபானியின் மகன் சந்திரன் ஒரு புதிய அரசியல் கட்சியை தொடங்கியுள்ளார்.


 

 
தமிழ்நாட்டில் ஏராளமான அரசியல் கட்சிகள் உள்ளன. இதனால் ஓட்டுப் போடப்போகும் மோது மக்கள் குழம்பிப் போவது வாடிக்கையான ஒன்றாக இருந்து வந்தது.
 
அந்நிலையில், ஜெ.வின் மறைவிற்கு பின் தமிழக அரசியலில் பல்வேறு திருப்பங்கள் நிறைந்த நிகழ்வுகள் தமிழக அரசியலில் அரங்கேறின. சசிகலாவிற்கு எதிராக ஓ.பி.எஸ் களம் இறங்கினார். ஆனால் அவர் புதிய கட்சி ஒன்று தொடங்காதது தமிழக மக்களுக்கு பெரிய ஆறுதலாக இருந்தது. 
 
ஆனால், சசிகலாவின் தலைமையை எதிர்த்து அரசியலுக்கு வந்த ஜெ. வின் அண்ணன் மகள் தீபா, எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவை என்ற கட்சியை தொடங்கினர். என்னது.. எம்.ஜி.ஆரின் அம்மா தீபாவா? என ஏகத்துக்கும் நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் கிண்டலடித்தனர்.
இந்நிலையில், எம்.ஜி.ஆரின் அண்ணன் சக்கரபாணியின் மகன் சந்திரன்,  நேற்று புதிய அரசியல் கட்சியை தொடங்கி அதற்கு அண்ணா எம்.ஜி.ஆர் அம்மா திராவிட முன்னேற்றக் கழகம் (அஎஅதிமுக) எனப் பெயர் வைத்துள்ளார். மேலும் அதற்கான கொடி மற்றும் தொழிற்சங்க கொடியையும் அவர் அறிமுகப்படுத்தினார். சிகப்பு நிறத்தில் அமைந்த கொடியில், அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரின் உருவப்படங்கள் அதில் இடம் பெற்றுள்ளன.


 

 
செய்தியாளர்களிடம் பேசிய சந்திரன் “ ஜெ.வின் மரணத்தில் உள்ள மர்மங்களை வெளியே கொண்டு வர பாடுபடுவோம். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் எங்கள் கட்சியின் சார்பில் வேட்பாளர் நிறுத்தப்படுவார். போயஸ்கார்டன் இல்லத்தை ஜெ.வின் நினைவு இல்லமாக மாற்ற வலியுறுத்துவோம்” எனக் கூறினார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்