மக்கள் நல கூட்டணிக்கு டாட்டா காட்டிய வைகோ!!

செவ்வாய், 27 டிசம்பர் 2016 (12:18 IST)
மக்கள் நல கூட்டணியில் இருந்து மதிமுக விலகுவதாக அக்கட்சியின் பொதுசெயலாளரான வைகோ அதிரடியாக அறிவித்துள்ளார்.


 
 
மதிமுக உயர்நிலை குழு கூட்டம் நடைபெற்றது. இதன் முடிவாக மக்கள் நல கூட்டணியில் இருந்து மதிமுக விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை மதிமுக பொதுசெயலாளர் வைகோ அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.
 
மேலும், வைகோ கூட்டணியில் இருந்து விலகினாலும் எங்களது நட்பு தொடரும் என தெரிவித்துள்ளார்.
 
இந்த முடிவை குறித்து திருமாவளவன் கூறுகையில், மக்கள் நல கூட்டணியில் இருந்து விலக மதிமுகவிற்கு முழு உரிமை மற்றும் சுதந்திரம் உள்ளது. அதில் நாங்கள் தலையிட மாட்டோம். கூட்டணி பிரிந்தாலும் நட்பு தொடரும் என தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்