இனிமேல் நாங்கதான் தேமுதிக: கொக்கரிக்கும் சந்திரகுமார்

செவ்வாய், 5 ஜூலை 2016 (12:38 IST)
தி.மு.க.வில் இணைந்த மக்கள் தேமுதிக தலைவர் சந்திரகுமார், தேமுதிக கட்சியில் உள்ள பெரும்பாலான தொண்டர்கள் திமுக கட்சியில் இணைய உள்ளார்கள் என்று கூறினார். அவரின் இத்தகைய பேச்சு இனி நாங்கள் தான் தேமுதிக என்பது போல் உள்ளது.


 


 
மக்கள் நலக் கூட்டணியில் விஜயகாந்த் இணைந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, மக்கள் தேமுதிக என்பதை தொடங்கினார் சந்திரகுமார். தமிழக சட்டசபை தேர்தல் முடிவுக்கு பின்னர் திமுக கட்சியில் இணைந்தார்.
 
தற்போது தீவிர சுற்றுப் பயணத்தில் இருக்கிறார். தேமுதிக தலைமையோடு அதிருப்தியில் இருக்கும் தொண்டர்களிடம் பேசி வருகிறார். இந்த சுற்றுப்பயணம் குறித்து சந்திரகுமார் கூறியுள்ளதாவது:-
 
தேர்தல் நேரத்தில் என்னிடம் பல மாவட்டங்களில் இருந்து முக்கிய நிர்வாகிகள் பேசி வந்தனர். அவர்களையும் தேமுதிக தொண்டர்களையும் சந்திக்க வேண்டும் என்பதற்காக இந்த சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு வருகிறேன். மண்டல வாரியாக சந்திப்பு நடந்து வருகிறது. தேமுதிக கட்சியை தவிர வேறு எந்த கட்சியிலும் சேர முடியாது என நினைக்கும் சிலர் மட்டும்தான் அந்த கட்சியில் இருப்பார்கள்.
 
சேலம் கோட்டை மைதானத்தில் நடக்க இருக்கும் பிரமாண்டக் கூட்டத்தில், தேமுதிக தலைவர் தவிர பெரும் எண்ணிக்கையிலான தொண்டர்கள் திமுக கட்சியில் இணைய இருக்கிறார்கள், என்று கூறினார். 
 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும் 

வெப்துனியாவைப் படிக்கவும்