அரசே கைதி முன் கைகட்டி நிற்பதா? மு.க.ஸ்டாலின் கண்டனம்

செவ்வாய், 28 பிப்ரவரி 2017 (20:23 IST)
அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவை பெங்களூர் சிறையில் இன்று மூத்த அமைச்சர்களான செங்கோட்டையன், காமராஜ், திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் சென்று பார்த்து சுமார் ஒரு மணி நேரம் ஆலோசனை செய்தனர். பின்னர் ஜெயிலுக்கு வெளியே பத்திரிகையாளர்களை சந்தித்தபோது, 'சிறையில் உள்ள சசிகலாவை கம்பி வழியாக பார்த்ததாகவும், அவருடைய பின்னணியில்தான் அதிமுக இயங்குவதாகவும் அமைச்சர்கள் பேட்டியளித்தனர்




இதுகுறித்து திமுக செயல்தலைவர் காட்டமான தனது கருத்தை தெரிவித்துள்ளார். ஒரு அரசுதான் கைதிகளை பராமரித்து வரவேண்டும் என்றும், ஆனால் அந்த அரசே கைதியை போய் பார்த்து கைகட்டி நிற்கிறதே என்று வேதனையுடன் தெரிவித்தார்.

தமிழகம் பேரவலத்தில் சிக்கியுள்ளதாகவும், திமுகவினால் மட்டுமே தமிழகத்தை மீட்டெடுக்க முடியும் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணையை வலியுறுத்தி ஓபிஎஸ் உண்ணாவிரதம் இருக்கவுள்ளது குறித்து கருத்துகூறிய ஸ்டாலின், 'முதல்வர் பதவியில் இருந்தபோது ஜெயலலிதா மரணம் பற்றி விசாரிக்காதது ஏன்? என்றும் இருப்பினும் ஓபிஎஸின் காலம் கடந்த உண்ணாவிரதப் போராட்ட முடிவை வரவேற்பதாகவும் அவர் தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்