சசிகலாவிற்கு முன்னுரிமை : மறக்கப்பட்ட ஜெயலலிதா

திங்கள், 12 டிசம்பர் 2016 (12:00 IST)
தமிழக மறைந்த முதல்வரும், அ.தி.மு.க பொதுச்செயலாளருமான ஜெயலலிதா கடந்த 5 ம் தேதி சென்னை அப்போலோ மருத்துவமனையில் இரவு 11.30 மணிக்கு உடல்நிலை சரியில்லாமல் காலமானார். 


 

 
இந்நிலையில் தமிழகம் முழுவதும் ஆங்காங்கே பல்வேறு விதமான அஞ்சலி செலுத்தி வருகின்றனர். ஆனால் கரூர் மாவட்ட அ.தி.மு.க வினர் மெத்தனம் காண்பித்து வருகின்றனர். ஆனால் தற்போது அ.தி.மு.க பொதுச்செயலாளராக நியமிக்க உள்ள சசிகலாவிற்கு மட்டும் வானுயர போஸ்டர்கள் மற்றும் பிளக்ஸ் கள் வைத்து கரூர் மாவட்ட அ.தி.மு.க வினர் வைத்துள்ளனர்.
 
இந்நிலையில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவை மறந்து விட்டார்களா ?அஞ்சலி செலுத்த ஆள் இல்லையா? என்ற கேள்விக்குறி எழுந்துள்ள நிலையில், மறைந்த முதல்வருக்கு மட்டும் சிறிய அளவிலான பிளக்ஸ்களும், தற்போது பொதுச்செயலாளராக அறிவிக்கப்பட உள்ள நிலையில் சசிகலாவிற்கு மட்டும் வானுயர பிளக்ஸ்களும் வைத்துள்ளது, அ.தி.மு.க தொண்டர்களிடம் மட்டுமில்லாமல், நடுநிலையான அரசியல் வாதிகளையும் ஒரு குழப்பத்தை உண்டு பண்ணியுள்ளது.
 
கரூர் வ.உ.சி தெரு மற்றும் கரூர் பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் மட்டும் தான் உண்மையான அ.தி.மு.க தொண்டர்கள் தங்களுடைய முடிகளை காணிக்கையாக்கி, பெண் தொண்டர்கள் பூ முடியை காணிக்கையாக்க, கரூர் மாவட்ட அ.தி.மு.க சார்பில் மாவட்ட அலுவலகத்தில் கூட முதல்வரின் புகைப்படத்திற்கு அஞ்சலி செலுத்தாதது, அ.தி.மு.கவினரிடையே மிகவும் புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது. 
 
மேலும் தமிழக போக்குவரத்து துறை அமைச்சரும், கரூர் மாவட்ட அ.தி.மு.க செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் தான் அமைச்சராகவும், எம்.எல்.எல்-வாக பதியேற்கும் போது நாளிதழ்களில் விளம்பரம் தராத நிலையில் இன்று பதவியேற்க வாரீர் என்று சசிகலாவிற்கு விளம்பரம் கொடுத்துள்ள நிகழ்ச்சி மேலும் கேள்விக்குறியை ஏற்படுத்தியுள்ளது.
 
சி.ஆனந்த குமார் - கரூர்  செய்தியாளர்

வெப்துனியாவைப் படிக்கவும்