முதன் முதலாக கருணாநிதி இல்லாமல் கூடிய திமுக பொதுக்குழு....

புதன், 4 ஜனவரி 2017 (09:08 IST)
சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெறும் திமுக பொதுக்குழு கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் கருணாநிதி கலந்துகொள்ளவில்லை.


 

 
இந்த பொதுக்குழு தற்போது பொதுச்செயலாளர் அன்பழகன் தலைமையில் நடைபெற்று வருகிறது. இதில் திமுக பொருளாலர் மு.க. ஸ்டாலின் மற்றும் கனிமொழி, துரைமுருகன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் ஏராளமனோர் மற்றும் தொண்டர்கள் வருகை தந்துள்ளனர்.
 
உடல்நலக்குறைவு காரணமாக, இந்த கூட்டத்திற்கு கருணாநிதி வருவாரா, மாட்டாரா என்ற சந்தேகம் திமுக உறுப்பினர்களுக்கு ஏற்பட்டது. இறுதியில் அவர் வரவில்லை என்பது தெரியவந்துள்ளது. இந்த பொதுக்குழுவில் திமுகவின் செயல் தலைவராக மு.க.ஸ்டாலின் அறிவிக்கப்படுவார் எனத் தெரிகிறது. 
 
திமுக வரலாற்றில் கருணாநிதி இல்லாமல் கூடிய முதல் பொதுக்குழு இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்