ஜெயலலிதா கைநாட்டு தான் வைத்தார்: தேர்தல் கமிஷன் ஆதாரம்

சனி, 29 அக்டோபர் 2016 (10:00 IST)
தமிழக இடைத்தேர்தலில் வேட்பாளர்களுக்கு கட்சி சார்பாக வழங்கப்படும் விண்ணப்பத்தில் கட்சித் தலைவர் கையெழுத்து இட வேண்டிய இடத்தில் ஜெயலலிதாவின் கைரேகை தான் உள்ளது.


 

 
தமிழக சட்டமன்ற தேர்தலில் பணம்பட்டுவாடா செய்யப்பட்டதாக இரண்டு தொகுதிகளில் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. தற்போது அந்த தொகுதிகளுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அத்தொகுதி வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
 
வேட்பாளர்கள் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்யும் போது அவர்களுக்கென கட்சி சின்னம் ஒதுக்கப்படும். அதற்கான ஒப்புதல் சான்றிதழில் கட்சி சார்பாக கட்சித் தலைவர் கையொப்பம் வழங்க வேண்டும்.
 
அதற்கு தனியாக Form-B வழங்கப்படும். அதில் ஜெயலலிதா தான் கையெழுத்து இட்டு வருகிறார். தற்போது அதில் ஜெயலலிதா கையெழுத்து இல்லை. அதற்கு பதிலாக அவரது கை ரேகை மட்டுமே உள்ளது.
 
இதற்கு ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையின் பேராசிரியர் பி.பாலாஜி ஒப்புதல் அளித்து இருக்கிறார். இதன்மூலம் ஜெயலலிதா உடல்நலம் கையெழுத்து இடும் நிலையில் கூட இல்லை என்பதை உணர்த்துகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்